பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2 கோடி செம்மரம் கடத்திய 13 பேர் கைது

Added : செப் 10, 2021
Share
Advertisement
வேலுார்:செம்மரக் கட்டை கடத்தலில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்தனர்.ஆந்திர மாநிலம், கொந்தலா செருவு சோதனைச் சாவடியில், அம்மாநில போலீசார் 4ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டேங்கர் லாரி, மூன்று கார்களை நிறுத்தினர்.டேங்கர் லாரியை நிறுத்தியவர்கள், தயாராக இருந்த காரில் ஏறி தப்பினர். டேங்கர் லாரியில் 3.5 டன் எடையில், 155 செம்மரக்
 ரூ.2 கோடி செம்மரம்  கடத்திய 13 பேர் கைது

வேலுார்:செம்மரக் கட்டை கடத்தலில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேரை ஆந்திர மாநில போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம், கொந்தலா செருவு சோதனைச் சாவடியில், அம்மாநில போலீசார் 4ம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு டேங்கர் லாரி, மூன்று கார்களை நிறுத்தினர்.டேங்கர் லாரியை நிறுத்தியவர்கள், தயாராக இருந்த காரில் ஏறி தப்பினர். டேங்கர் லாரியில் 3.5 டன் எடையில், 155 செம்மரக் கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு 2 கோடி ரூபாய்.

விசாரணையில் வேலுார், திருப்பத்துார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடத்தலில் ஈடுபட்டது தெரிந்தது. கும்பலை தேடி ஆந்திர தனிப்படை போலீசார் தமிழகம் வந்தனர்.திருப்பத்துார், வேலுார் மாவட்டங்களைச் சேர்ந்த, 24 - 27 வயதுள்ள 13 வாலிபர்களை நேற்று கைது செய்து, மூன்று கார்களை பறிமுதல் செய்தனர். அனைவரும் கடப்பா சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X