பொது செய்தி

தமிழ்நாடு

எழுச்சியுடன் விநாயகர் சதுர்த்தி ஹிந்து முன்னணி பெருமிதம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
திருப்பூர்:''தடை செய்ய நினைத்தாலும், விநாயகர் சதுர்த்தி விழா எழுச்சியாக மாறியுள்ளதால், தமிழக அரசுக்கு நன்றி,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.திருப்பூரில், ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி, சிலை பிரதிஷ்டை மற்றும் வழிபாட்டை, நேற்று துவக்கி வைத்த அவர் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு
 எழுச்சியுடன் விநாயகர் சதுர்த்தி ஹிந்து முன்னணி பெருமிதம்

திருப்பூர்:''தடை செய்ய நினைத்தாலும், விநாயகர் சதுர்த்தி விழா எழுச்சியாக மாறியுள்ளதால், தமிழக அரசுக்கு நன்றி,'' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.

திருப்பூரில், ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி, சிலை பிரதிஷ்டை மற்றும் வழிபாட்டை, நேற்று துவக்கி வைத்த அவர் கூறியதாவது:கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது.

கடந்தாண்டு, இதை விட கூடுதல் தொற்று பரவல் இருந்த நிலையிலும், உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு, அரசு வழிகாட்டுதல் படி ஹிந்து முன்னணி நிகழ்ச்சி நடத்தியது. இந்தாண்டும் தயாராக இருந்தோம். ஆனால், விநாயகர் ஊர்வலத்திற்கு அரசு தடை விதித்தது. அரசு தடை செய்ய நினைத்தாலும், ஒரு புறம் விநாயகர் சதுர்த்தி விழா எழுச்சியாக மாறியுள்ளது. அதற்காக அரசுக்கு நன்றி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X