கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீசாருக்கு 8 மணி நேர வேலை: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Updated : செப் 12, 2021 | Added : செப் 10, 2021 | கருத்துகள் (1+ 18)
Share
Advertisement
மதுரை : 'போலீசாரின் குறைகளுக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், போலீஸ் கமிஷனை தமிழக அரசு அமைக்க வேண்டும். போலீசாருக்கு எட்டு மணி நேர பணி அமல்படுத்த வேண்டும். சம்பளத்தை 10 சதவீதம் அதிகரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கரூர் மாசிலாமணி தாக்கல் செய்த பொதுநல மனு: போலீசாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன்.
 போலீசார், 8 மணி நேர வேலை, குறைதீர் கமிஷன் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை : 'போலீசாரின் குறைகளுக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், போலீஸ் கமிஷனை தமிழக அரசு அமைக்க வேண்டும். போலீசாருக்கு எட்டு மணி நேர பணி அமல்படுத்த வேண்டும். சம்பளத்தை 10 சதவீதம் அதிகரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

கரூர் மாசிலாமணி தாக்கல் செய்த பொதுநல மனு: போலீசாக பணிபுரிந்து, ஓய்வு பெற்றேன். தமிழகத்தில் 1,000 பேருக்கு இரண்டு போலீசார் உள்ளனர். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. போலீசார் 24 மணி நேரம் பணிபுரிகின்றனர்.ம.பி., மேற்கு வங்கம், மஹாராஷ்டிராவை விட தமிழகத்தில் போலீசாருக்கு சம்பளம் குறைவு. துவக்கப்பள்ளி ஆசிரியர்களைவிட, போலீசாருக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது.போலீசாருக்கு சம்பள உயர்வு அளிக்க வேண்டும். போலீஸ், எஸ்.ஐ., காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மாசிலாமணி குறிப்பிட்டார்.




பணி விலகல்



நீதிபதிகள் என்.கிருபாகரன் - தற்போது பணி ஓய்வு, பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:போலீஸ் பணியில் இருந்து 10 ஆண்டுகளில் 6,823 பேர் விலகியுள்ளனர். 2011ல் 31 பேர், 2020ல் 25 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற பதில் அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பணியால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தற்கொலை செய்கின்றனர். போலீசாருக்கு சரியான நேரத்தில், மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும். நோய்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைத்து, போலீசாரின் குறைகளுக்கு தீர்வு காண, ஏற்கனவே இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மாறாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், 2019ல் அரசு போலீஸ் கமிஷன் அமைத்தது. இந்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை. தொடர் பணியால் போலீசார் உளவியல் மற்றும் உணர்ச்சிகரமான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.

எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சட்ட நிபுணர்கள், சமூக சேவகர், மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதி, ஓய்வு பெற்ற மற்றும் பணியில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கொண்ட போலீஸ் கமிஷனை மூன்று மாதங்களில் அமைக்க, இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.இவர்கள், போலீசாரின் பிரச்னையை புரிந்து தீர்வு கொடுப்பர்.

தற்போது அமைத்துள்ள கமிஷன் இந்நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப இல்லை. இருந்தாலும், கமிஷனின் பணியை இந்நீதிமன்றம் குறைத்து மதிப்பிடவில்லை.பல்வேறு வகையான குற்றங்கள், குறிப்பாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதற்கேற்ப பல்வேறு துறைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். காவல் துறையை நவீனப்படுத்த வேண்டும். அதற்கு தொகையை அரசு ஒதுக்க வேண்டும்.காலிப் பணியிடங்களை நிரப்பாததால் காவல் துறை மிகுந்த மன அழுத்தம், வேதனையை எதிர்கொள்கிறது. காவல் துறை பணி ஆபத்துமிக்கது. அதை மற்ற பணிகளுடன் ஒப்பிட முடியாது. காவல் துறையின் சம்பளத்தை குறைந்தபட்சம் 10 சதவீதம் அதிகரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.



'ஷிப்ட்' முறை



காவல் துறையில் நிலையான பணி நேரம் இல்லை. அவர்களுக்கு எட்டு மணி நேரம் பணி என கூறப்பட்டாலும், நடைமுறையில், அவர்கள் சமூகத்தில் நிகழும் பல பிரச்னைகளை 24 மணி நேரமும் கையாள வேண்டியுள்ளது.எனவே, எட்டு மணி நேர பணியை விதிகள்படி மூன்று 'ஷிப்டு'களாக கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு ஷிப்டுக்கும் ஏற்ப, போலீசார் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். இதனால் அவர்கள் மன அழுத்தம், பணிச்சுமைக்கு ஆளாக மாட்டார்கள். இது, காவல் துறையின் திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள செயல்பாட்டிற்கு அவசியம். இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1+ 18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-செப்-202108:52:51 IST Report Abuse
Kasimani Baskaran அதிகாரத்துக்கு அடிபணியாமல் நேர்மையாக இருந்தால் காவல் துறையில் வேலை செய்பவர்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X