சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டி கொலையில் காமுக முதியவர் கைது

Added : செப் 10, 2021
Share
Advertisement
நாகப்பட்டனம்:மனநிலை பாதித்த மூதாட்டி கொலை வழக்கில், முதியவரை போலீசார் கைது செய்தனர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த வேப்பஞ்சேரியைச் சேர்ந்தவர் அம்பிகா, 65. கணவர் சில ஆண்டு களுக்கு முன் இறந்து விட்டார்.மனநலம் பாதிக்கப்பட்ட அம்பிகா, நாகை மாவட்டம், நத்தபள்ளத்தில் சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பகுதியில் சுற்றித் திரிந்து, இரவில் ஊராட்சி அலுவலக
 மூதாட்டி கொலையில் காமுக முதியவர் கைது

நாகப்பட்டனம்:மனநிலை பாதித்த மூதாட்டி கொலை வழக்கில், முதியவரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த வேப்பஞ்சேரியைச் சேர்ந்தவர் அம்பிகா, 65. கணவர் சில ஆண்டு களுக்கு முன் இறந்து விட்டார்.மனநலம் பாதிக்கப்பட்ட அம்பிகா, நாகை மாவட்டம், நத்தபள்ளத்தில் சகோதரர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்பகுதியில் சுற்றித் திரிந்து, இரவில் ஊராட்சி அலுவலக வராண்டாவில் படுத்து துாங்குவது வழக்கம்.

இந்நிலையில், 7ம் தேதி ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம், ரத்த காயங்களுடன் அம்பிகா இறந்து கிடந்தார். திருக்குவளை போலீசார், அப்பகுதியில் சுற்றிய கூலி தொழிலாளி சீனிவாசன், 65 என்பவரை பிடித்து விசாரித்தனர்.மது போதையில் சீனிவாசன், அன்று இரவு துாங்கிக் கொண்டிருந்த அம்பிகாவிடம் பாலியல் சில்மிஷம் செய்துஉள்ளார்.அம்பிகா மறுக்கவே, ஆத்திரமடைந்த சீனிவாசன், அவரது தலையில் கல்லால் அடித்து கொலை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X