பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணிக்கு உதவிய 'தினமலர்' வனக்காவலர் பெருமிதம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
பெரியகுளம்:'தினமலர்' நாளிதழ் படிப்பதை வழக்கமாக்கி கொண்டதால் அரசு பணி கிடைத்தது எனக் கூறிய வனக்காவலர், தன் திருமண நாளில், நுாலகத்தில் 1,000 ரூபாய் செலுத்தி புரவலராக இணைந்தார்.தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த பட்டதாரி தினேஷ், 27. தினமலர் சந்தாதாரர். பட்டப்படிப்பு முடித்து, பெரிய குளம் தென்கரை நுாலகத்தில் போட்டித் தேர்வு பகுதியில் படித்தார். தினமலர் நாளிதழில்
 அரசு பணிக்கு உதவிய 'தினமலர்'    வனக்காவலர் பெருமிதம்

பெரியகுளம்:'தினமலர்' நாளிதழ் படிப்பதை வழக்கமாக்கி கொண்டதால் அரசு பணி கிடைத்தது எனக் கூறிய வனக்காவலர், தன் திருமண நாளில், நுாலகத்தில் 1,000 ரூபாய் செலுத்தி புரவலராக இணைந்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த பட்டதாரி தினேஷ், 27. தினமலர் சந்தாதாரர். பட்டப்படிப்பு முடித்து, பெரிய குளம் தென்கரை நுாலகத்தில் போட்டித் தேர்வு பகுதியில் படித்தார்.

தினமலர் நாளிதழில் வெளிவரும் பொது அறிவு கேள்வி, பதில்கள், அரசியல், விளையாட்டு உட்பட பல்வேறு செய்திகளை படித்துஉள்ளார்.கடந்தாண்டு ஜனவரியில், அரசு போட்டித் தேர்வில் வெற்றி பெற்று, வருஷநாடு வனச்சரகத்தில் வனக்காவலர் பணியில் சேர்ந்தார். இவருக்கும் சித்ராதேவி என்பவருக்கும் செப்., 8ல் பெரியகுளத்தில் திருமணம் நடந்தது. அன்று, பெரியகுளம் தென்கரை நுாலகரிடம் 1,000 ரூபாய் செலுத்தி தினேஷ் தன்னை புரவலராக இணைத்துக் கொண்டார்.

தினேஷ் கூறும்போது, ''அரசு பணி பெற எனக்கு உதவியாக இருந்த தினமலர் நாளிதழுக்கு நன்றி. நாளிதழில் வரும் முக்கிய செய்திகளை வெட்டி சேகரித்து படித்து வந்தேன். ''இது, போட்டித் தேர்வில் வெற்றி பெற உதவியது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X