பொது செய்தி

தமிழ்நாடு

'பாலிமர் பூங்காவில் விரைவில் நிலம் ஒதுக்கீடு'

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:-''தமிழ்நாடு பாலிமர் பூங்காவில், தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கும் பணி விரைவில் துவங்கும்,'' என, சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம் வாயலுார் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு பாலிமர்

சென்னை:-''தமிழ்நாடு பாலிமர் பூங்காவில், தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கும் பணி விரைவில் துவங்கும்,'' என, சிப்காட் நிர்வாக இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: 'டிட்கோ' எனும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டம் வாயலுார் மற்றும் புழுதிவாக்கம் கிராமங்களில் 265 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்காவை 216 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய துறையின் பிளாஸ்டிக் பூங்கா திட்டத்தின் கீழ், இந்த பூங்கா செயல்படுத்தப்பட்டு வருகிறது.முதல் கட்டமாக, 168 ஏக்கர் பரப்பளவில், பாலிமர் பொருட்கள் தயாரிக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகள் அமைக்க உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், தொழிற்சாலைகளுக்கு நிலம் ஒதுக்கும் பணி விரைவில் துவங்கும்.அதற்கேற்ப சாலை அமைத்தல், தண்ணீர் வினியோகம் செய்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட உட்கட்டமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X