சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விதி மீறிய 3 ஆம்னி பஸ் அதிகாரிகள் சிறைபிடிப்பு

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை,:விதிமீறலில் ஈடுபட்ட மூன்று ஆம்னி பஸ்களை, போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறைபிடித்து உள்ளனர்.தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து, பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், வரி செலுத்தாத, உரிய அனுமதி பெறாத வாகனங்களையும் இயக்கி, வசூலில் இறங்குவதாக புகார் எழுந்தது. இதையடுத்து,

சென்னை,:விதிமீறலில் ஈடுபட்ட மூன்று ஆம்னி பஸ்களை, போக்குவரத்து துறை அதிகாரிகள் சிறைபிடித்து உள்ளனர்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி, சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து, பலரும் சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி, ஆம்னி பஸ் உரிமையாளர்கள், வரி செலுத்தாத, உரிய அனுமதி பெறாத வாகனங்களையும் இயக்கி, வசூலில் இறங்குவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, போக்குவரத்து துறை கமிஷனர் சந்தோஷ் மிஷ்ரா, சென்னை மண்டலம் மற்றும் ஸ்ரீரங்கம் மண்டலம் எனப் பிரித்து, தமிழகம் முழுதும் ஆம்னி பஸ்களை சோதனை செய்ய உத்தரவிட்டார்.இரண்டு நாட்கள் நடந்த சோதனையில், வரி செலுத்தாதது மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி, சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் இயக்கப்பட்ட, தலா ஒரு ஆம்னி பஸ் என மூன்று பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன.

மேலும் 44 பஸ்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டன. அத்துடன் 91 ஆயிரம் ரூபாய் அபராதமாகவும், 1.11 லட்சம் ரூபாய் வரியாகவும் வசூலிக்கப்பட்டது.இந்த சோதனையில் அதிக ஆட்கள்; பாரம் ஏற்றியது; உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கிய 446 வாகனங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் 1.62 லட்சம் ரூபாய் அபராதம்; 37 ஆயிரத்து 500 ரூபாய் வரியாகவும் வசூலிக்கப்பட்டது. மேலும் 6.50 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கும் வகையில் ரசீது வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X