கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமியிடம் பாலியல் வன்முறை திருமணமானவருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 10, 2021
Share
Advertisement
சென்னை:சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில், திருமணமானவரை விடுதலை செய்த மகளிர் நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது. திருவள்ளூரைச் சேர்ந்தவர் விக்டர் ஜான்; திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, சிறுமியை பாலியல் வன்முறை செய்ததில், அவர் கர்ப்பமானார். மேல்

சென்னை:சிறுமியை பாலியல் வன்முறை செய்த வழக்கில், திருமணமானவரை விடுதலை செய்த மகளிர் நீதிமன்ற உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.

திருவள்ளூரைச் சேர்ந்தவர் விக்டர் ஜான்; திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து, சிறுமியை பாலியல் வன்முறை செய்ததில், அவர் கர்ப்பமானார்.


மேல் முறையீடு

கருவை கலைக்க முயற்சித்த போது, டாக்டர் மறுத்து விட்டார்; குழந்தையும் பிறந்தது. சிறுமியின் பெற்றோர், திருவள்ளூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர்.

விக்டருக்கு எதிராக, 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விக்டருக்கு உடந்தையாக இருந்ததாக, நான்கு பேருக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் விசாரித்தது. பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவருக்கு, 18 வயது பூர்த்தியாகி விட்டது; அவரது ஒப்புதலுடன் தான் பாலியல் உறவு நடந்துள்ளது என முடிவெடுத்து, விக்டர் ஜான் உள்ளிட்ட ஐந்து பேரையும், மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், அரசு வழக்கறிஞர் சுகேந்திரன் வாதாடினார்.மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:

சிறுமியின் பிறந்த தேதி சான்றிதழில், 1998 பிப்ரவரி என, குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது சம்மதத்துடன் பாலியல் உறவு நடந்ததாகவும், 18 வயது பூர்த்தியாகி விட்டதாலும், விக்டர் ஜானை விடுதலை செய்திருப்பதாக, மகளிர் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.


முக்கியத்துவம்

புகாரில், 2015ம் ஆண்டில் இருந்து, விக்டர் ஜானுடன் நெருக்கமாக இருந்ததாகவும், கரு தரித்த உடன், அவரிடம் தெரிவித்ததாகவும் சிறுமி கூறியுள்ளார். எனவே, சம்பவம் நடக்கும் போது, பாதிக்கப்பட்ட சிறுமி, 18 வயதை பூர்த்தி அடைந்திருக்கவில்லை; அப்போது அவளுக்கு 17 வயது.போக்சோ சட்டத்தின்படி அவள் சிறுமி தான்.

பாலியல் உறவுக்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்தாலும் கூட, சிறுமி என்பதால், அந்த சம்மதத்துக்கு முக்கியத்துவம் கிடையாது.போக்சோ சட்டத்தின் கீழ், விக்டர் ஜான் குற்றம் புரிந்துள்ளார். அவரை விடுதலை செய்த, மகளிர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மற்ற நால்வர் விடுதலை உறுதி செய்யப்படுகிறது.


பயிற்சி வேண்டும்



விக்டர் ஜானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப் படுகிறது. அபராத தொகையில், 1.75 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்டவரின் குழந்தையின் பெயரில் 'டிபாசிட்' செய்ய வேண்டும்.போக்சோ சட்ட வழக்குகளை கையாளும் புலனாய்வு அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு நீதிபதிகளுக்கு, உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X