தமிழ்நாடு

தூக்கத்துக்கு இங்கே காசு! பயனற்று போகும் 100 நாள் வேலை திட்டம்

Added : செப் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அன்னுார் : 'கோவை மாவட்டத்தின் பல இடங்களில், 100 நாள் வேலை திட்டத்தில், அரசின் பல நுாறு கோடி ரூபாய் நிதி வீணாகிறது' என புகார் எழுந்துள்ளது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேலையை, குறைந்தது 7 மணி நேரத்தில் முடித்தால், 256 ரூபாய் தினசரி சம்பளமாக வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில்,
தூக்கத்துக்கு இங்கே காசு! பயனற்று போகும் 100 நாள் வேலை திட்டம்

அன்னுார் : 'கோவை மாவட்டத்தின் பல இடங்களில், 100 நாள் வேலை திட்டத்தில், அரசின் பல நுாறு கோடி ரூபாய் நிதி வீணாகிறது' என புகார் எழுந்துள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட வேலையை, குறைந்தது 7 மணி நேரத்தில் முடித்தால், 256 ரூபாய் தினசரி சம்பளமாக வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், அன்னுார், எஸ். எஸ்.குளம் உட்பட, 12 ஒன்றியங்களில் 228 ஊராட்சிகளில் இத்திட்டத்தில் பணிகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஒன்றியத்திலும், சராசரியாக 1,500 பேர் வீதம், தினமும், கோவை மாவட்டத்தில் 18 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

தமிழகத்துக்கு மட்டும் ஆண்டுக்கு 5,000 கோடி ரூபாய் இந்த திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தால் பாதிப்புகளே அதிகம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னுார் வட்டார விவசாயிகள் கூறியதாவது:கோவை மாவட்டத்தின் பல இடங்களில், ஊராட்சிகளில் இந்த திட்டத்தில், ஏற்கனவே துார்வாரப்பட்ட குளம், குட்டைகள் மீண்டும் துார்வாரப்பட்டதாக கணக்கு காட்டப்படுகிறது.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியது, செடிகள் நட்டது, பாதையில் மண்ணை ஒழுங்குபடுத்துவது என நிலையான கட்டமைப்பை ஏற்படுத்தாத பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இதில் செய்யப்படும் பணிகளை, ஒன்றிய அதிகாரிகள், ஒன்றிய பொறியாளர்கள், சரியான முறையில் கண்காணிப்பதில்லை. இதில் வேலைக்கு வருவோரை விட, 25 சதவீதம் கூடுதலாக கணக்கு காட்டப்பட்டு, அந்த பணம் முறைகேடு செய்யப்படுகிறது.

எந்த ஒன்றியத்தில், எந்த ஊராட்சிக்கு சென்று பார்த்தாலும், மதியத்துக்கு மேல் புளிய மரம் அல்லது வேப்ப மரத்தடியில் தொழிலாளர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம்.நான்கு மணி நேரம் குறைந்த வேலை செய்தாலே, 256 ரூபாய் கிடைக்கிறது என்பதால், அன்னுார், எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களில் பெரும்பாலான தோட்டங்களில் விவசாய பணிக்கு ஆட்கள் வருவதில்லை. பருத்தி பறிக்க, களை எடுக்க என எந்த வேலைக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. மேலும், பொக்லைன், ஜே.சி.பி., உட்பட இயந்திரங்களை கொண்டு பணிகளை செய்து விட்டு அதை தொழிலாளர்களை கொண்டு செய்ததாக கணக்கு காண்பிக்கப்படுகிறது.

அனைத்து ஊராட்சிகளிலும் தினமும் எந்த பணி செய்யப்படுகிறது; எவ்வளவு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் என்கிற விபரத்தை, பணி நடக்கும் இடத்திலேயே எழுதி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களை கண்காணிக்க செய்ய வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தின் பொறுப்பிலிருந்து, ஊராட்சி நிர்வாகங்களை விலக்க வேண்டும்.அரசு, இத்திட்டத்துக்கு ஒதுக்கும் நிதி வீணாகிறது.

மேலும் ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 நாள் வேலைத்திட்ட பணிகளை சமூக தணிக்கை செய்ய வேண்டும். சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். 100 நாள் திட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தில் காலை முதல் மாலை வரை முழுமையாக வேலையை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-செப்-202107:59:06 IST Report Abuse
அப்புசாமி இதுமாதிரி ஒரு ஃப்ராடு திட்டம் நாம் எங்கேயும் காணோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X