பொது செய்தி

தமிழ்நாடு

பத்திரப்பதிவு டோக்கன் 100ல் இருந்து 200 ஆக...

Added : செப் 10, 2021
Share
Advertisement
அன்னுார் : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பத்திரப்பதிவுக்கான தினசரி டோக்கன், 100ல் இருந்து, 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.அன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு கீழ், அன்னுார், அவிநாசி மற்றும் சூலுார் ஒன்றியங்களை சேர்ந்த, 21 ஊராட்சிகள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான, பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நில அடமானம் மற்றும் திருமண பதிவு உள்ளிட்டவை

அன்னுார் : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, பத்திரப்பதிவுக்கான தினசரி டோக்கன், 100ல் இருந்து, 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அன்னுார் சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு கீழ், அன்னுார், அவிநாசி மற்றும் சூலுார் ஒன்றியங்களை சேர்ந்த, 21 ஊராட்சிகள் மற்றும் இரண்டு பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான, பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. நில அடமானம் மற்றும் திருமண பதிவு உள்ளிட்டவை செய்யப்படுகின்றன.சார் - பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 100 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

இதனால் பத்திரப்பதிவு செய்ய வேண்டியோர், நிலம் வாங்குவார், விற்போர், விண்ணப்பித்த பின் எட்டு நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில், கடந்த 8ம் தேதி செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதையடுத்து, அன்னுார் சார்பதிவாளர் அலுவலகத்தில், தினமும், 200 பத்திரங்கள் வரை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 13ம் தேதி முதல், தினமும், 200 டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். இதனால் நிலம் வாங்குவோர், விற்போர், நில அடமானம் செய்வோர் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனால் பத்திரப்பதிவு செய்ய நீண்ட நாள் காத்திருக்க தேவையில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X