பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகனே வினைத் தீர்ப்பவனே...! சதுர்த்தி விழாவில் கொண்டாட்டம்

Added : செப் 10, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காட்டூர் வலம்புரி விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடந்தது.காரமடை சாலையில் தொலைதொடர்பு நிலையம் அருகே, சித்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. சிவன்புறம்
 விநாயகனே வினைத் தீர்ப்பவனே...! சதுர்த்தி விழாவில் கொண்டாட்டம்

மேட்டுப்பாளையம் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

காட்டூர் வலம்புரி விநாயகர் கோவிலில், சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜை நடந்தது.காரமடை சாலையில் தொலைதொடர்பு நிலையம் அருகே, சித்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது. சிவன்புறம் ஆசிரியர் காலனியில், ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவிலில் விழா சிறப்பாக நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இந்து முன்னணியினர், மேட்டுப்பாளையம் தாலுகா முழுவதும், விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தினர்.

காரமடை ஒன்றியத்தில், 118 இடங்களிலும், மேட்டுப்பாளையத்தில், 39, சிறுமுகையில், 24, பில்லுார் அணை பகுதியில் 2 என, மொத்தம், 183 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. பொதுமக்கள் சார்பில் ஏழு இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.பிற்பகல் 3:30 மணிக்கு, இந்து முன்னணி நிர்வாகிகள், தனித்தனியாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்தனர்.

மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.* எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், 26 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி சார்பில், கோவில்பாளையம் பெருமாள் கோவில் முன்புறம், கணபதி ஹோமத்துடன் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வடக்கு மாவட்ட பொருளாளர் அசோக்குமார் தலைமையில் இந்து முன்னணியினர் வழிபாடு செய்தனர்.

* கோட்டைப்பாளையத்தில், பா.ஜ., பிரசார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் செந்துார் முருகேஷ் தலைமையில் விழா நடந்தது. காளப்பட்டி மாரியம்மன் கோவில் முன்புறம், கரட்டுமேடு காவி கார்னர் அருகே, வையம்பாளையம், இடிகரை உட்பட, 26 இடங்களில், 5 அடி மற்றும் 3 அடி விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. காளப்பட்டி நிர்வாகி ஜீவா, இந்து முன்னணி, பா.ஜ., ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

* இந்து முன்னணி சார்பில் துடியலுாரில், 17, கவுண்டம்பாளையத்தில், 28, பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில், 34, சரவணம்பட்டி, 18, இடிகரை, 6 என 103 சிலைகள் விநாயகர் கோவில் மற்றும் தனியார் இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதிகாலை சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு குடியிருப்புகளில் உள்ள விநாயகர் கோவில்களில், அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதியம் சிறப்பு அன்னதானம் நடந்தது.* சின்னியம்பாளையம் சித்தி விநாயகர், கருமத்தம்பட்டி புதுார் சித்தி விநாயகர், நீலம்பூர் விநாயகர், வரப்பிள்ளையார் கோவில், அரசூர், கணியூர், சோமனுார் செல்வ விநாயகர் உட்பட கோவில்களில் பால், தயிர், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.* சூலுார் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில், ஹிந்து முன்னணி உள்ளிட்ட இந்து இயக்கங்கள் சார்பில், அந்தந்த பகுதிகளில் உள்ள சிறு கோவில்கள் மற்றும் குல தெய்வ கோவில்களில், கணபதி ஹோமம் செய்யப்பட்டு, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.கோவில் வளாகங்கள், தனியார் இடங்களில், 50க்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. மாலையில், நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X