பொது செய்தி

தமிழ்நாடு

கொண்டைக்கடலையில் நவீன சாகுபடி முறை ; வேளாண்துறை விவசாயிகளுக்கு அறிவுரை

Added : செப் 10, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம், : நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கொண்டைக்கடலை சாகுபடி முறைகள் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், கொண்டக்கடலை விவசாயம், கோவை மாவட்டத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.தற்போது, பயறு வகை பயிர்களில் உயர் சாகுபடி

பெ.நா.பாளையம், : நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கொண்டைக்கடலை சாகுபடி முறைகள் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வாயிலாக, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சார்பில், கொண்டக்கடலை விவசாயம், கோவை மாவட்டத்தில் சிறப்பாக நடந்து வருகிறது.தற்போது, பயறு வகை பயிர்களில் உயர் சாகுபடி தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் முக்கியத்துவம், ஒருங்கிணைந்த உர நிர்வாகம், பயிர்களின் எண்ணிக்கையை பராமரித்தல் உட்பட தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.நவ., மாதத்தில் மானாவாரி புரட்டாசி பட்டத்தில், கொண்டைக்கடலையை விதைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு, 70 முதல், 75 கிலோ விதைகளை விதைக்கும் போது, செடிக்கு செடி பத்து செ.மீ., பாருக்கு பார், 30 செ.மீ., இடைவெளி விடவேண்டும்.

முன் செய் நேர்த்தியாக நிலத்தை, மூன்று அல்லது நான்கு முறை புழுதிபட நன்கு உழ வேண்டும். விதைகளை, ரைசோபியம் பயிர் வளர்ப்பு ஒரு பாக்கெட் அல்லது பாஸ்போ பாக்டீரியாவை கொண்டு, அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.களைக்கொல்லியை, விதைத்த மூன்றாம் நாட்களில் மண்ணில் படும்படி, 500 லிட்டர் நீரில் கலந்து தெளித்து, பின், 25ம் நாள் கைகளை கொண்டு களை நிர்வாகம் செய்யவேண்டும். பயிரின் வளர்ச்சியை பொருத்து வளர்ச்சிப் பருவம் பூக்கும் தருணத்தின் போது, நீர் பாய்ச்ச வேண்டும்.

பயறு வகை சாகுபடிக்கு, நிலத்தில் நீர் தேங்கக்கூடாது. ஒரு எக்டருக்கு, 25 கிலோ டி.ஏ.பி., இரு முறைக்கு தேவைப்படுகின்றது.ஒரு எக்டருக்கு தேவையான, 12.5 கிலோ டி.ஏ.பி., 10 முதல், 15 லிட்டர் நீரில் முதல் நாளே கலந்து வைக்க வேண்டும். பின்பு, நன்கு வடிகட்டி தெளிவான கரைசலை, 625 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். செடிகள் நனையும்படி, காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.

விதைத்த, 85 முதல், 90 நாட்களில் காய் முற்றிய பின், அறுவடை செய்ய வேண்டும். காய்களை உடைத்து, விதைகளை மட்டும் பிரித்தெடுக்க வேண்டும்.ஒருங்கிணைந்த பயிரிடுவதன் வாயிலாக, ஏக்கருக்கு ஆயிரம் முதல் 1,150 கிலோ வரை மகசூல் பெறலாம்.விவரங்களுக்கு, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் மைதிலி, விஜயகோபால் ஆகியோரை அணுகலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X