பொது செய்தி

தமிழ்நாடு

இப்ப வருமோ... எப்ப வருமோ...! ஐந்து ஆண்டுகளாக இதே நிலை

Added : செப் 10, 2021
Share
Advertisement
அன்னுார் : அன்னுார் தாலுகாவில் கோர்ட் அமைக்கப்படுமா என, மக்கள் ஐந்து ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.கோவை வடக்கு தாலுகாவில் இருந்து, 2012ம் ஆண்டு அன்னுாரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. அன்னுார் தாலுகா அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் இதுவரை கோர்ட் அமைக்கப்படவில்லை.அன்னுார் மக்கள் கூறியதாவது:அன்னுார் பகுதியை சேர்ந்தவர்கள், சிவில்

அன்னுார் : அன்னுார் தாலுகாவில் கோர்ட் அமைக்கப்படுமா என, மக்கள் ஐந்து ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.

கோவை வடக்கு தாலுகாவில் இருந்து, 2012ம் ஆண்டு அன்னுாரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. அன்னுார் தாலுகா அமைக்கப்பட்டு, 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் இதுவரை கோர்ட் அமைக்கப்படவில்லை.அன்னுார் மக்கள் கூறியதாவது:அன்னுார் பகுதியை சேர்ந்தவர்கள், சிவில் வழக்குகளுக்காக, கோவை கோர்ட்டுகளுக்கும், கிரிமினல் வழக்குகளுக்காக மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கும் செல்கின்றனர்.

பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளை பெறவும், மேட்டுப்பாளையம் அல்லது கோவைக்கு, அன்னுார் மக்கள் அலைய வேண்டியுள்ளது. அன்னுார் தாலுகாவில் கோர்ட் அமைக்க கோரி, வக்கீல்கள், பொதுமக்கள், ஐந்து ஆண்டுகளாக கோரி வருகின்றனர், இதற்காக, தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தனர்.

கடந்தாண்டு, அன்னுார் தாலுகாவில் கோர்ட் அமைக்க இடம் தேர்வு செய்து தருமாறு வருவாய் துறைக்கு, நீதி துறையிடம் இருந்து கடிதம் வந்தது. அப்போதைய தாசில்தார் சந்திரா தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது; எனினும் இடம் முடிவாகவில்லை.இதையடுத்து, 'தற்காலிகமாக, சத்தி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கோர்ட் செயல்படுத்தலாம்' என, வருவாய் துறையினர் தெரிவித்தனர்.அதன் பின், கோர்ட் அமைப்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. சட்டசபை கூட்டத்தொடர், வரும் 13ம் தேதி முடிவடைய உள்ளது. அதற்குள் கோர்ட் குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X