கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் தலைவர் படங்கள்: 60 நாட்களில் அகற்ற ஐகோர்ட் 'கெடு'

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை:'வாகனங்களில் கட்சி கொடிகள், தலைவர்கள் படங்களை 60 நாட்களில் அகற்ற, உரிமையாளர்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்த வேண்டும். தவறினால் அரசு தரப்பில் அகற்றிவிட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:வழக்கறிஞர் தொழில் புனிதமானது. சிறந்த தலைவர்களை உருவாக்கி

மதுரை:'வாகனங்களில் கட்சி கொடிகள், தலைவர்கள் படங்களை 60 நாட்களில் அகற்ற, உரிமையாளர்களுக்கு அரசு தரப்பில் அறிவுறுத்த வேண்டும். தவறினால் அரசு தரப்பில் அகற்றிவிட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:வழக்கறிஞர் தொழில் புனிதமானது. சிறந்த தலைவர்களை உருவாக்கி உள்ளது.புற்றீசல்கள் போல் வெளிமாநிலங்களில் பெருகி வரும் சட்டக் கல்லுாரிகளால், வழக்கறிஞர் தொழிலின் புனிதம் பாதித்துள்ளது.வெளிமாநில சட்டக் கல்லுாரிகளில் நேரடியாக படிக்காமல், உரிய கல்வித் தகுதி இன்றி சட்டப் படிப்பை விலைக்கு வாங்குகின்றனர். அவர்கள் வழக்கறிஞர்களாக வலம் வருகின்றனர்.

தமிழகத்தில், பல வாகனங்களில் வழக்கறிஞருக்குரிய ஸ்டிக்கரை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், போலீசிடம் இருந்து தப்பிக்க இந்த ஸ்டிக்கரை பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்துகின்றனர். நடவடிக்கைபலர், சில சமயங்களில் சட்டக் கல்லுாரி மாணவர்கள் எனக்கூறிக் கொள்கின்றனர்.

சட்டக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். வழக்கறிஞர் ஸ்டிக்கரை, தவறான நோக்கில் வாகனங்களில் பயன்படுத்துவோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன் - தற்போது பணி ஓய்வு, பி.புகழேந்தி உத்தரவு:தேனியில் வேகமாக வந்த காரை சிக்னலில் போலீசார் நிறுத்த முயன்றனர்; நிற்கவில்லை. அதில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. போலீசார் பின் தொடர்ந்து சென்று மடக்கினர். அதில் கஞ்சா இருந்தது.இதுபோல் தான் வாகனங்களில் கட்சிக் கொடிகள், தலைவர்களின் படங்கள், வழக்கறிஞர் மற்றும் ஊடகம் ஸ்டிக்கர்களை ஒட்டி குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

கொடி அல்லது பதவி பெயர் பலகை அல்லது கட்சி - சமுதாய தலைவர்களின் படங்கள் அல்லது ஸ்டிக்கர்களை வாகனங்களில் அதன் உரிமையாளர்கள் பயன்படுத்த, மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழிவகை ஏதும் இல்லை.


போலீசார் தயக்கம்

இத்தகைய வாகனங்களை சோதனையிட்டால் வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கருதி போலீசார் தயங்குகின்றனர். கட்சி கொடிகள், தலைவர்களின் படங்கள், பதவிகள், வழக்கறிஞர், பிரஸ் ஸ்டிக்கர் இடம் பெற்றிருப்பதை பொருட்படுத்தாமல், வாகனங்களை போலீசார் சோதனையிட வேண்டியது அவசியம். தேர்தல் நேரத்தில் வாகனங்களில் கட்சி கொடிகள் இடம்பெறுவதன் அவசியத்தை இந்நீதிமன்றம் புரிந்து கொள்கிறது.

சாதாரண நாட்களில் கட்சி கொடிகள் அல்லது பதவி பெயர் பலகை அல்லது தலைவர்களின் படங்கள் வாகனங்களில் இடம்பெற வேண்டிய அவசியமில்லை. எனவே, இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல் உத்தரவுகளை பிறப்பிக்கிறது.

*வாகனங்களில் வண்ண கண்ணாடிகளை - 'டின்ட் கிளாசஸ்' 60 நாட்களில் அகற்ற உரிமையாளர்களுக்கு டி.ஜி.பி., உள்துறை செயலர், போக்குவரத்துத் துறை செயலர் அறிவுறுத்த வேண்டும். அகற்றத் தவறினால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்

*வாகனங்களில் தலைவர்கள் மற்றும் கட்சியின் சின்னங்கள் அடங்கிய படங்களை 60 நாட்களில் அகற்ற, உரிமையாளர்களுக்கு அரசுத் தரப்பில் அறிவுறுத்த வேண்டும்.தவறினால் படங்களை அரசுத் தரப்பில் அகற்றிவிட்டு, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்

*மோட்டார் வாகன விதிகளில், பரிந்துரைக்கப்பட்ட அளவிற்கு உட்பட்டு வாகனங்களில் நம்பர் பிளேட் இருக்க வேண்டும். இதை 60 நாட்களுக்குள் வாகன உரிமையாளர்கள் சரி செய்ய, அரசுத் தரப்பில் வழிகாட்டுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X