சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொழுந்தனை கொன்ற அண்ணி கள்ளக்காதலனுடன் கைது

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஈரோடு:கணவனை பிரிந்து கொழுந்தனுடன் குடும்பம் நடத்திய பெண், போதையில் அடாவடி செய்ததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.ஈரோடு, வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் மதன், 29; பெயின்டர். இவரது பெரியம்மா மகன் மகேஸ்வரன். அவரது மனைவி மஞ்சு, 25; இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மஞ்சுவுக்கும், மதனுக்கும் சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்தது; மகேஸ்வரன் கண்டித்தார். இதனால் கணவரை பிரிந்து, ஆறு

ஈரோடு:கணவனை பிரிந்து கொழுந்தனுடன் குடும்பம் நடத்திய பெண், போதையில் அடாவடி செய்ததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

ஈரோடு, வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் மதன், 29; பெயின்டர். இவரது பெரியம்மா மகன் மகேஸ்வரன். அவரது மனைவி மஞ்சு, 25; இரண்டு குழந்தைகள் உள்ளனர்.மஞ்சுவுக்கும், மதனுக்கும் சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்தது; மகேஸ்வரன் கண்டித்தார். இதனால் கணவரை பிரிந்து, ஆறு மாதங்களாக கொழுந்தனுடன் குடும்பம் நடத்தினார். குடி பழக்கம் கொண்ட மதன், மஞ்சுவை அடிக்கடி உல்லாசத்துக்கு அழைத்து, 'டார்ச்சர்' கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு போதையில் வந்த மதன் தகராறு செய்துள்ளார்.

ஆத்திரமடைந்த மஞ்சு, மதனை கழுத்தை நெரித்து கொன்றார். அவரது உறவினர்களிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'போதையில் வீட்டுக்கு வந்த மதன் மயங்கி விழுந்தார். 'பேச்சு, மூச்சு இல்லாததால், ஆம்புலன்சில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளேன்' என்றார்.உறவினர்கள் சென்று பார்த்தபோது, மதன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம் இருந்ததால், தாலுகா போலீசில் புகார் செய்தனர்.

போலீசார், மஞ்சுவிடம் விசாரித்தனர். மதன் குடிபோதையில் டார்ச்சர் செய்ததால், மற்றொரு கள்ளக்காதலனான ராஜன், 35, என்பவருடன் சேர்ந்து, மதன் கழுத்தை நெரித்து கொலை செய்ததை மஞ்சு ஒப்புக் கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X