பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் நினைவு தினம் எப்போது? முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும்

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை:மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தி உள்ளனர். தன் இறுதிக் காலத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில், பாரதியார் வசித்து வந்தார். தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்., 11- நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார்.எட்டயபுரம்நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள்
பாரதியார் நினைவு தினம் எப்போது? முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும்

சென்னை:மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும் என்று, தமிழ் ஆர்வலர்களும், ஆய்வாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

தன் இறுதிக் காலத்தில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில், பாரதியார் வசித்து வந்தார். தன் 39-வது வயதில், 1921-ம் ஆண்டு செப்., 11- நள்ளிரவு 1:30 மணியளவில் இறந்தார்.


எட்டயபுரம்

நள்ளிரவு 12:00 மணிக்கு மேல் என்பது, அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால், செப்., 12, பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு, அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர்.ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும், செப்.,11ல் பாரதியார் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்துவிட்டது.

ஆனால், சென்னை மாநகராட்சியின் இறப்பு சான்றிதழில், செப்., 12ல் பாரதியார் இறந்ததார் என குறிப்பிடப்படுகிறது.இது குறித்து, பாரதி ஆய்வாளரான ச.சுப்புரெத்தினம் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர். பாரதியார் நினைவு தினம் செப்.,12 என, அதிகாரப்பூர்வமாக தேதியை மாற்ற முயன்றனர்.

இதன் காரணமாக, 2014-ல், தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, எட்டயபுரத்தில் உள்ள கல்வெட்டில், மறைந்த தினம் செப்-., 12 என்று திருத்தம் செய்யப்பட்டது. அப்போது முதல், செப்., 12-ல் தான் பாரதியார் நினைவு தினத்தை, தமிழக அரசு அனுசரித்து வருகிறது.


குழப்பம்

சென்னை திருவல்லிக்கேணியில் அரசு பராமரிப்பில் உள்ள பாரதியார் நினைவு இல்ல முகப்பு கல்வெட்டிலும், பாரதியார் மறைந்த தினம், செப்., -12 என்றே பொறிக்கப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம்.அவரது நுாற்றாண்டு நினைவு தினத்தை கடைப்பிடிக்கும், வானவில் பண்பாட்டு மையம், செப்., 12ல் நடத்தும் நினைவு தின நிகழ்வில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, 'பாரதி சுடர்' ஏற்றி வைப்பதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பாரதியாருக்கு புகழ் சேர்க்கும் விதத்தில், செப்., 11 'மகாகவி நாள்' என்று அனுசரிக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பு, பாரதியாரின் மறைந்த நாள் குறித்து, மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும் என்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-செப்-202108:45:36 IST Report Abuse
Kasimani Baskaran ஒரு நாளில் பாரதியை இவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. பாரதியைவிட கனிமொழி சிறந்த கவிஞர் என்று சொல்லாமல் இருந்தால் போதும்.
Rate this:
Cancel
viji kumar - villupuram,இந்தியா
11-செப்-202108:29:49 IST Report Abuse
viji kumar எதை எதையோ மாற்றம் போது இப்போது சரியான தேதியையும் மாற்றலாமே சென்னை மாநகராட்சியின் இறப்பு சான்றிதழில், செப்., 12ல் பாரதியார் இறந்ததார் என்று இருக்கும்போது தயக்கமேன் ?
Rate this:
Cancel
11-செப்-202108:06:59 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழ் நாட்காட்டிபடி ஆவணி மாதம்👌 தேதியைக் குறிப்பிடலாம். ஆனால் நமது நாட்காட்டி உதயாதி நாழிகை வைத்ததுதான் நாளைக் கணக்கிடுகிறது . நள்ளிரவில் அல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X