சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஆம்பூர்:ஆம்பூர் அருகே இரு குழந்தைகள், குளத்தில் மூழ்கி இறந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கள்ளூரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன், 45; சென்னையில் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் வேன் டிரைவர். இவரது மனைவி மீனாட்சி, 40. தம்பதிக்கு நான்காம் வகுப்பு படிக்கும் மகன் ஜஸ்வந்த், இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஹரி பிரீத்தா இருந்தனர்.இவரது மாமியார், திருப்பத்துார் மாவட்டம், கடம்பூரில் வசித்து

ஆம்பூர்:ஆம்பூர் அருகே இரு குழந்தைகள், குளத்தில் மூழ்கி இறந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கள்ளூரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன், 45; சென்னையில் ஐஸ்கிரீம் நிறுவனத்தில் வேன் டிரைவர். இவரது மனைவி மீனாட்சி, 40. தம்பதிக்கு நான்காம் வகுப்பு படிக்கும் மகன் ஜஸ்வந்த், இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஹரி பிரீத்தா இருந்தனர்.

இவரது மாமியார், திருப்பத்துார் மாவட்டம், கடம்பூரில் வசித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட, குடும்பத்தோடு மாமியார் வீட்டுக்கு நேற்று முன்தினம் லோகேஸ்வரன் வந்தார். நேற்று காலை வீட்டில் விநாயகர் வழிபாடு செய்தனர். மதியம் 2:00 மணிக்கு ஆம்பூர் அருகே கைலாசகிரி மலைக்கு சென்றனர்.அப்போது அங்குள்ள குளத்தில் இறங்கி, ஜஸ்வந்த், ஹரி பிரீத்தா மீன் பிடித்து கொண்டுஇருந்தனர்.

லோகேஸ்வரனும், மீனாட்சியும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். திடீரென குழந்தைகள் நீரில் மூழ்கினர்.ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், குழந்தைகள் உடலை மீட்டனர். பெற்றோர் கண் முன்னே இரு குழந்தைகளும் இறந்ததை பார்த்து, அனைவரும் கதறி அழுதனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X