தடையை மீறி விநாயகர் சிலை வேலுாரில் 50 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி விநாயகர் சிலை வேலுாரில் 50 பேர் கைது

Added : செப் 11, 2021
Share
வேலுார்:வேலுாரில் தடையை மீறி எடுத்து வந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், 50 பேரை கைது செய்தனர்.கொரோனா தொற்று காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தள்ளுமுள்ளுவேலுார் கோட்ட ஹிந்து முன்னணி தலைவர் மகேஷ் தலைமையில், 3 அடி உயரமுள்ள மூன்று விநாயகர் சிலைகளை வேலுார் கலெக்டர் அலுவலகம் அருகே, அனுமன் கோவிலில் வைத்து
 தடையை மீறி விநாயகர் சிலை வேலுாரில் 50 பேர் கைது

வேலுார்:வேலுாரில் தடையை மீறி எடுத்து வந்த விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், 50 பேரை கைது செய்தனர்.

கொரோனா தொற்று காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தள்ளுமுள்ளுவேலுார் கோட்ட ஹிந்து முன்னணி தலைவர் மகேஷ் தலைமையில், 3 அடி உயரமுள்ள மூன்று விநாயகர் சிலைகளை வேலுார் கலெக்டர் அலுவலகம் அருகே, அனுமன் கோவிலில் வைத்து பூஜை செய்ய ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

வேலுார் போலீசார், பொது இடத்தில் சிலை வைக்க அனுமதி இல்லை என தடுத்தனர். ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். மூன்று விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து, 50 பேரை கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையில், ஹிந்து முன்னணியினர், 5 அடி உயர விநாயகர் சிலையை பைக்கில் வைத்து, ஓட்டை பிள்ளையார் கோவிலில் பிரதிஷ்டை செய்ய கொண்டு வந்தனர். போலீசார் தடுத்தனர். வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு நடந்தது.பின், பைக்கில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு ரோட்டில் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றிய ஹிந்து முன்னணியினர், ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரிய ஏரியில் கரைத்தனர்.


வழிபாடு

விழுப்புரம் மாவட்ட பா.ஜ., அலுவலக நுழைவு வாயிலில், 6 அடி உயர விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.ஆர்.டி.ஓ., அரிதாஸ், தாசில்தார் வெங்கடசுப்ரமணியன், டி.எஸ்.பி., பழனிசாமி தலைமையிலான போலீசார் சிலையை அகற்றுமாறு அறிவுறுத்தினர். ஆனால், பா.ஜ.,வினர் சிலையை மாலை 6:00 மணி வரை வைத்திருப்பதாக கூறினர். மாலை 6:00 மணிக்கு, சிலையை அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X