பொது செய்தி

தமிழ்நாடு

4 நாட்களுக்கு மழை பெய்யும்!

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஓரிரு இடங்களில், இன்று மழை பெய்யும். மேலும், இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செப்.,14ல்,

சென்னை:'தமிழகத்தில், தென் மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நான்கு நாட்களுக்கு மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு:மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஓரிரு இடங்களில், இன்று மழை பெய்யும். மேலும், இரு தினங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். செப்.,14ல், நீலகிரி, கோவை, தென்காசி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பொய்யும்.

தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்த வரை, 48 மணி நேரத்திற்குள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மத்திய வங்க கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X