ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை

Added : செப் 11, 2021
Share
விருத்தாசலம்:கணவரின் மது பழக்கத்தால் மனமுடைந்த மனைவி, மகள், மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 40; கூலித் தொழிலாளி.இவரது மனைவி பாக்கியலட்சுமி, 36; மகள் திவ்யா, 17; பிளஸ் 2 மாணவி. மகன் திவாகரன், 15; பத்தாம் வகுப்பு படித்தார்.பாக்கியராஜ் தினமும் மது அருந்தி வந்துள்ளார். பாக்கியலட்சுமி தட்டிக்

விருத்தாசலம்:கணவரின் மது பழக்கத்தால் மனமுடைந்த மனைவி, மகள், மகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 40; கூலித் தொழிலாளி.இவரது மனைவி பாக்கியலட்சுமி, 36; மகள் திவ்யா, 17; பிளஸ் 2 மாணவி. மகன் திவாகரன், 15; பத்தாம் வகுப்பு படித்தார்.பாக்கியராஜ் தினமும் மது அருந்தி வந்துள்ளார். பாக்கியலட்சுமி தட்டிக் கேட்டதால், தகராறு ஏற்பட்டது.

வழக்கம் போல் நேற்றும் மது அருந்த போவதாக மனைவிக்கு, பாக்கியராஜ் மொபைல் போனில் தகவல் தெரிவித்தார்.இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி, மகள், மகனுடன் அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்திற்கு சென்றார். அங்கு, மூவரும் முந்திரி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X