அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கை பொருளாதார சரிவு இந்தியாவை பாதிக்கும்: மாஜி அமைச்சர் சிதம்பரம் பேட்டி

Added : செப் 11, 2021
Share
Advertisement
காரைக்குடி:இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,'' என காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார். அவர் கூறியதாவது, சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக்கல்லுாரி அறிவித்ததை வரவேற்கிறேன். கண்டனுாரில் கதர் கிராம தொழில் மையத்தை ரூ.47 லட்சத்தில் சீரமைத்து தருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். அழகப்பா பல்கலைக்கு

காரைக்குடி:இலங்கை போன்ற நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும்,'' என காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, சிவகங்கைக்கு வேளாண் மற்றும் சட்டக்கல்லுாரி அறிவித்ததை வரவேற்கிறேன். கண்டனுாரில் கதர் கிராம தொழில் மையத்தை ரூ.47 லட்சத்தில் சீரமைத்து தருவதால் வேலைவாய்ப்பு கிடைக்கும். அழகப்பா பல்கலைக்கு துணைவேந்தர் நியமிக்க வேண்டும். கொரோனா காலத்தில் வட மாநிலங்களில் அதிகளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது.

இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் சரிந்தால் இந்திய பொருளாதாரமும் பாதிக்கும். உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., -- காங்., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. மத்தியில் ஆட்சி மாறினால் தான் பெட்ரோல், டீசல் விலை குறையும். பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு வழங்க உள்ளனர். இது குறித்து பார்லிமெண்டில் தெரிவிக்கவில்லை. இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கையால் அச்சுறுத்தல் இல்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X