பொது செய்தி

இந்தியா

அச்சு ஊடகங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுடில்லி:நம்பத்தகுந்த செய்திகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்கள் முன்னிலை வகிப்பதாகவும், பத்திரிகைகளில் வெளியாகும் விளம்ரபங்களுக்கு அதிக பலன் இருப்பதாகவும் சமீபத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.எதிர்பார்ப்புஅச்சு ஊடகங்களின் வீச்சு குறித்து, 'ஹவாஸ் மீடியா குரூப் இந்தியா' என்ற நிறுவனம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. பல்வேறு

புதுடில்லி:நம்பத்தகுந்த செய்திகளை வெளியிடுவதில் அச்சு ஊடகங்கள் முன்னிலை வகிப்பதாகவும், பத்திரிகைகளில் வெளியாகும் விளம்ரபங்களுக்கு அதிக பலன் இருப்பதாகவும் சமீபத்திய கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


எதிர்பார்ப்பு

அச்சு ஊடகங்களின் வீச்சு குறித்து, 'ஹவாஸ் மீடியா குரூப் இந்தியா' என்ற நிறுவனம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதன் விபரம்:கொரோனா பெருந்தொற்று காலத்தில் இருந்து வாசகர்கள் செய்தித் தாள் படிக்கும் நேரம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, 41 - 50 வயது வரையிலான வாசகர்கள் அதிக நேரம் நாளிதழ்களை வாசிக்கின்றனர். நாளிதழ்கள் மீதான வாசகர்களின் எதிர்பார்ப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. செய்திகளை தெரிந்து கொள்வதற்காக மட்டும் நாளிதழ்களை வாசிப்பது என்ற நிலை மாறியுள்ளது. அறிவை வளர்த்துக்கொள்வது, நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வது, மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் நாளிதழ்களை படிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.

பொதுவான செய்திகளுக்கு அடுத்தபடியாக அறிவியல் - தொழில்நுட்பம், சர்வதேச விவகாரங்கள், சுகாதாரம் குறித்த செய்திகள் அதிகம் வாசிக்கப்படுகின்றன.மக்கள் உறுதிஅச்சு ஊடகங்கள் வாயிலாக மட்டுமே நம்பத்தகுந்த செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்.

அதேபோல அச்சு ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் வாசகர்கள் மத்தியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குறிப்பிட்ட 'பிராண்ட்' மீதான நம்பகத்தன்மை, விலை மற்றும் நம்பிக்கை ஆகியவை, அச்சு விளம்பரங்களில் பல மடங்கு அதிகமாக உள்ளன. வெறும் 10 சதவீத வாசகர்கள் மட்டுமே, விளம்பரங்களை தவிர்க்கின்றனர்.இவ்வாறு கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X