கிணற்றில் பாய்ந்த வண்டி விவசாயி, மாடுகள் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் பாய்ந்த வண்டி விவசாயி, மாடுகள் பலி

Added : செப் 11, 2021
Share
திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் அருகே, கிணற்றுக்குள் மாட்டு வண்டி பாய்ந்ததில் விவசாயி, இரண்டு மாடுகள் நீரில் மூழ்கி பலியாகினர்.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன், 65. தன் இரட்டை மாட்டு வண்டியில் மரங்களை ஏற்றி வரச் சென்றார். மாடுகளை வண்டியை இழுப்பதற்கு இன்னும் சரியாக பழக்கப் படுத்தவில்லை. இதனால், தோட்டத்தில் கிடந்த

திண்டுக்கல்:ஒட்டன்சத்திரம் அருகே, கிணற்றுக்குள் மாட்டு வண்டி பாய்ந்ததில் விவசாயி, இரண்டு மாடுகள் நீரில் மூழ்கி பலியாகினர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன், 65. தன் இரட்டை மாட்டு வண்டியில் மரங்களை ஏற்றி வரச் சென்றார். மாடுகளை வண்டியை இழுப்பதற்கு இன்னும் சரியாக பழக்கப் படுத்தவில்லை. இதனால், தோட்டத்தில் கிடந்த ஆட்டுக்கல்லில் ஏறி, இறங்கி வேகமாகச் சென்றன.

கருப்பண்ணன் எவ்வளவோ முயன்றும் மாடுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது தோட்டத்தில் இருந்து விரைந்து வந்த மாடுகள், ரோட்டைத் தாண்டி, எதிரே இருந்த கிணற்றுக்குள் பாய்ந்தன. கிணற்றில் 30 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தது. கிணற்றுக்குள் விழுந்த கருப்பண்ணன் நீரில் மூழ்கி இறந்தார்.

மாட்டு வண்டி, மாடுகளின் மேல் விழுந்து அமுக்கியதால், இரண்டு மாடுகளும் மூச்சுத் திணறி பலியாயின. ஒட்டன்சத்திரம் தீயணைப்புத் துறையினர் கருப்பண்ணன் உடல், இறந்த மாடுகளை மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X