இந்தியா

மோடி குறித்து சர்ச்சை பேச்சு அசாதுதீன் ஓவைசி மீது வழக்கு

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
லக்னோ : சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பராபங்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் பேரணி நடந்தது. கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற அந்த
 மோடி , சர்ச்சை பேச்சு அசாதுதீன் ஓவைசி , வழக்கு

லக்னோ : சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள பராபங்கி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சியின் பேரணி நடந்தது. கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற அந்த கூட்டத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்
பற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது. முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர்.


latest tamil news



கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதோடு, சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதுாறாக பேசியதாகவும் ஓவைசி மீது புகார் எழுந்துஉள்ளது.
இதையடுத்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் பராபங்கி நகர போலீசார், ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்தனர்.இது குறித்து, பராபங்கி காவல் துறை கண்காணிப்பாளர் பிரசாத் கூறியதாவது:வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதுடன், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை துாண்டும் வகையிலும் ஓவைசி பேசி உள்ளார்.
மேலும், பிரதமர் மற்றும் முதல்வருக்கு எதிராக அநாகரிகமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு
உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
11-செப்-202115:43:28 IST Report Abuse
Raj UP தேர்தல் வருதுல்ல, உவைசிய தனியா நிற்க வைத்து, ஒட்டு பிரிக்கனுமுள்ள ...
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
11-செப்-202115:37:01 IST Report Abuse
Raj முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஏராளமான மக்கள் மோடி, அமித்ஸாவின் வங்க மாநில பிரச்சாரத்தின் போது திரண்டார்கள் அதற்காக மோடி மீதும், அமித் சாவின் மீதும் என்ன நடவடிக்கை எடுத்திர்கள்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
11-செப்-202111:35:29 IST Report Abuse
pradeesh parthasarathy அவர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளது... ////ஆனால் கைது செய்யப்படமாட்டார் ..... ஏன்னா அவரை அப்படி பேச சொல்லி அங்கு மத கலவரத்தை உருவாக்கி பிஜேபி க்கு சாதகமான சூழலை அங்கு உருவாக்க சொன்னதே பிஜேபி தானே ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X