சேதமடைந்த கட்டடத்தில் செயல்படும் அருங்காட்சியகம் அச்சத்துடன் பணியாளர்கள்

Added : செப் 11, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் :ராமநாதபுரத்தில் சிமென்ட் பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழும் சேதமடைந்த பழமையான கட்டடத்தில்அரசு அருங்காட்சியம் செயல்படுகிறது. இதனால் பணியாளர்கள் விபத்து அச்சத்துடன் பணிபுரிகின்றனர். பார்வையாளர்களின் வருகையும்குறைந்துள்ளது.ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் முன்னாள் ராணுவத்தினர் பவன்கட்டடத்தில் முதல்தளத்தில் 2008 முதல் அரசு


ராமநாதபுரம் :ராமநாதபுரத்தில் சிமென்ட் பூச்சு அடிக்கடி பெயர்ந்து விழும் சேதமடைந்த பழமையான கட்டடத்தில்அரசு அருங்காட்சியம் செயல்படுகிறது. இதனால் பணியாளர்கள் விபத்து அச்சத்துடன் பணிபுரிகின்றனர். பார்வையாளர்களின் வருகையும்குறைந்துள்ளது.ராமநாதபுரம் கேணிக்கரை ரோட்டில் முன்னாள் ராணுவத்தினர் பவன்கட்டடத்தில் முதல்தளத்தில் 2008 முதல் அரசு அருங்காட்சியகம்செயல்படுகிறது. கீழ்தளத்தில் முன்னாள் ராணுவவீரர்களுக்கானமருத்துவமனை உள்ளது. அருங்காட்சியகத்தில் 65 கற்சிலைகள்,பழமையான மரத்திலான சிற்பங்கள், ஓவியங்கள், அரியவகைநாணயங்கள், ஓலைச்சுவடிகள் என நுாற்றுக்கணக்கான பழங்காலபொருட்கள் உள்ளன. இந்த கட்டடம் 1990ல் கட்டப்பட்டு போதிய பராமரிப்புஇல்லாமல் தற்போது கூரை சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழேவிழுகிறது.விரிசல்பலஇடங்களில் கட்டடத்தின் சுவரில் விரிசல்ஏற்பட்டுள்ளது. பணியாளர்கள், விபத்து அச்சத்துடன்பணிபுரிகின்றனர்.பார்வையாளர்களின் வருகையும் குறைந்துள்ளது. பலத்த மழைபெய்தால்பெரியஅளவில் கட்டடம் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அருங்காட்சியகத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மக்கள்வலியுறுத்தியுள்ளனர்.அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் கூறுகையில், ''கட்டடம் சேதமடைந்துள்ளதால் வேறு இடம் ஒதுக்கி தரக்கோரி கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்,'' என்றார்.-------------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X