ராமநாதபுரம் புதுபஸ்ஸ்டாண்டில் நெரிசல்...| Dinamalar

தமிழ்நாடு

ராமநாதபுரம் புதுபஸ்ஸ்டாண்டில் நெரிசல்...

Added : செப் 11, 2021
Share
-ராமநாதபுரம் ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வருகைக்கு ஏற்ப போதிய இடவசதியில்லை. இதனால் டவுன் பஸ்கள் வெளியே ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இதன் வளாக கட்டடம் பராமரிப்பு இன்றி அடிக்கடி இடிந்து விழுவதால் பயணிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.


-ராமநாதபுரம் ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் வருகைக்கு ஏற்ப போதிய இடவசதியில்லை. இதனால் டவுன் பஸ்கள் வெளியே ரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. இதன் வளாக கட்டடம் பராமரிப்பு இன்றி அடிக்கடி இடிந்து விழுவதால் பயணிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். ராமநாதபுரம் புதுபஸ்ஸ்டாண்ட் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது. துவக்கத்தில் 100க்கு மேற்பட்ட பஸ்கள், தினமும் 5 ஆயிரம் பயணிகள் வந்து சென்றனர். ஆனால் தற்போது தினமும் 300க்கு மேற்பட்ட பஸ்கள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இலவச கழிப்பறை, போதிய குடிநீர், அமரும் நாற்காலிகள் என அடிப்படைவசதிகள் இல்லை. பாதிப்புகட்டண வாகன நிறுத்துமிடத்தில் வெயில், மழையில் டூவீலர் பாதிக்கப்படுகிறது. கடைகளும் பஸ் ஸ்டாண்டிற்குள் உள்ளதாலும், வாரத்தில் புதன் சந்தையில் கூடுதலாக கடைகள் வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ் ஸ்டாண்ட் வளாக கடைகள், கழிப்பறை அமைந்துள்ள கட்டடம் பழுதாகி அடிக்கடி இடிந்துவிழுகிறது. சர்வசாதாரணமாக வளாகத்திற்குள் ஆட்டோக்கள், கார்கள் வந்து செல்கின்றன. டூவீலர்களை நிறுத்துகின்றனர். இதனால் பஸ்கள் நிறுத்தும்போது, புறப்படும் போதும் காலதாமதம் ஏற்படுகிறது.மினிபஸ், டவுன் பஸ்களை வெளியே நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பயணிகள், பஸ்கள் வருகைக்கு ஏற்ப பட்டணம்காத்தான் கிழக்குகடற்கரை சாலை பகுதிக்கு பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய வேண்டும். முதற்கட்டமாக குறைந்தபட்சம் விரிவாக்கம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ----------------

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X