சிங்கம்புணரியில் தென்னை நார் கயிறு உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயம் எதிர்பார்ப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிங்கம்புணரியில் தென்னை நார் கயிறு உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசும், கயிறு வாரியமும் இறங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 'சும்மா கயிறு திரிக்காதடா' என்பதன் அர்த்தம் வேறாக தொனித்தாலும் தமிழகத்தின் பாரம்பரிய குடிசை தொழில்கள் பட்டியலில் கயிறு திரித்தலும் ஒன்று. அதை குடிசை தொழிலாக இல்லாமல்

சிவகங்கை : சிங்கம்புணரியில் தென்னை நார் கயிறு உற்பத்தியாளர்களே விலையை நிர்ணயம் செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசும், கயிறு வாரியமும் இறங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 'சும்மா கயிறு திரிக்காதடா' என்பதன் அர்த்தம் வேறாக தொனித்தாலும் தமிழகத்தின் பாரம்பரிய குடிசை தொழில்கள் பட்டியலில் கயிறு திரித்தலும் ஒன்று. அதை குடிசை தொழிலாக இல்லாமல் குடும்பத் தொழிலாகவே சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மக்கள் செய்து வருகின்றனர்.* 15 கிராமங்களில் கயிறு உற்பத்தி:இந்நகரை சுற்றியுள்ள 15 கிராமங்களில் 50 கூடங்கள் நடக்கிறது. இத்தொழிலில் 7000 தொழிலாளர்கள் வாழ்வாதாரம் நடத்துகின்றனர். தென்னை நாரில் வடம், பாரம், வால், கமலை, கடகா, பிடி, தாம்பு, புணயல் கட்டி, தும்பு, தென்னை மஞ்சு கயிறு வகைகள் தயாரிக்கின்றனர். கயிறின் தடிமன் 2 முதல் 4 பிளே வரை இருக்கும். நாள் ஒன்றுக்கு 20 டன் கயிறு வரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்கு அனுப்புகின்றனர். நல்ல விற்பனை காலங்களில் நாள் ஒன்றுக்கு 70 டன் வரை விற்பனை செய்து வந்தனர்.* குடிசை தொழிலை காக்குமா அரசு:தொழிலாளர் பற்றாக்குறையின்றி கிடைத்தால் சிங்கம்புணரி கயிறு திரித்தல் தொழில் உலகளவில் பிரசித்தி பெறும் என்கின்றனர் தொழிலாளர்கள். இது போன்று பாரம்பரிய குடிசை தொழில்கள் அழிவின் விழிம்பிற்கு சென்றுவிடாமல் இருக்க, இது போன்ற தொழில்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை தமிழக அரசுக்கும், மத்திய அரசின் கயிறு வாரியத்திற்கும் உண்டு என்கின்றனர் தொடர்ந்து இத்தொழிலில் ஈடுபட்டு வரும் குடிசை தொழிலாளர்கள்.* உற்பத்தியாளரிடம் விலை நிர்ணயம்:ஏ.பிச்சை வேலவன், தலைவர், கயிறு உற்பத்தி, சேவை தொழில் கூட்டுறவு சங்கம், சிங்கம்புணரி:மாதத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வந்தது இத்தொழில். காலப்போக்கில் ஊழியர்கள் பற்றாக்குறையால் குடும்ப ரீதியாக பாரம்பரியமாக செய்து வந்தவர்கள் மட்டுமே கயிறு திரித்தல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கம்புணரி தென்னை நார் கயிறுக்கு வடமாநிலங்களில் நல்ல வரவேற்பு உண்டு. மத்திய அரசு, வங்கிகள் மூலம் 90 சதவீத மானியத்தில் கடனுதவி செய்கிறது. ஆனால் உற்பத்தி செய்யும் கயிறுகளுக்கு விலை வைக்கும் உரிமையை கயிறு உற்பத்தியாளர்களுக்கு வழங்கினால் இத்தொழில் இன்னும் சூடுபிடிக்கும். வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்வதால் சிண்டிகேட் அமைத்து விலை உயர்த்துவதில்லை. இதனால் கயிறு உற்பத்தி தொழில் சிரமத்திற்கு இடையே நடந்து வருகிறது, என்றார்.=====

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X