கடற்படையில் இணைய உள்ளது ஐ.என்.எஸ்., துருவ் கப்பல்

Added : செப் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
விசாகப்பட்டினம் : எதிரி நாட்டு செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கவும், ஏவுகணை அச்சுறுத்தலைக் கண்டறியவும் உதவும் அதிநவீன கப்பலான ஐ.என்.எஸ்., துருவ், இந்திய கடற்படையில் இணைய உள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், என்.டி.ஆர்.ஓ., எனப்படும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு மற்றும் நம் கடற்படை இணைந்து இந்த அதிநவீன கண்காணிப்பு கப்பலை
 கடற்படையில்  இணைய உள்ளது ஐ.என்.எஸ்., துருவ் கப்பல்

விசாகப்பட்டினம் : எதிரி நாட்டு செயற்கைக்கோள்களைக் கண்காணிக்கவும், ஏவுகணை அச்சுறுத்தலைக் கண்டறியவும் உதவும் அதிநவீன கப்பலான ஐ.என்.எஸ்., துருவ், இந்திய கடற்படையில் இணைய உள்ளது. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், என்.டி.ஆர்.ஓ., எனப்படும் தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு மற்றும் நம் கடற்படை இணைந்து இந்த அதிநவீன கண்காணிப்பு கப்பலை வடிவமைத்து உள்ளன.


750 கோடி ரூபாய்



மொத்தம் 750 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கப்பலை கட்டமைக்க திட்டமிடப்பட்டது.தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை சேர்ந்த 'ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட்' என்ற நிறுவனம், இந்த கப்பல் கட்டும் பணியை 2014ல் துவக்கியது.
கடந்த 2018ல் கப்பல் கட்டும் பணி முடிக்கப்பட்டதை தொடர்ந்து, சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள பெருங்கடல் கண்காணிப்பு கப்பலான ஐ.என்.எஸ்., துருவ், 175 மீ., நீளமும், 10 ஆயிரம் டன் எடையும் உடையது.இந்த கப்பலில் அதிநவீன மின்னணு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக இந்திய பகுதிகளை கண்காணிக்கும் எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்களை எளிதாக அடையாளம் காண முடியும்.


latest tamil news



இந்திய நகரங்களையும், ராணுவ கட்டமைப்புகளை நோக்கி வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளையும், இந்த கப்பலால் துல்லியமாக அடையாளம் காண முடியும். மேலும் இந்திய - பசிபிக் பிராந்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளின் உண்மையான திறனையும் இக்கப்பலால் மதிப்பிட முடியும்.
இந்நிலையில் ஐ.என்.எஸ்., துருவ் கப்பல் இந்திய கடற்படையில் இணைய தயாராக உள்ளது.

ஐ.என்.எஸ்., துருவ் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டபின், பெருங்கடல் கண்காணிப்பு கப்பல்களைக் கொண்ட ஆறாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மட்டுமே இந்தக் கண்காணிப்பு ரக கப்பல்கள் இருந்த நிலையில் இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேர்கிறது. தகவல்
கடற்படையில் ஐ.என்.எஸ்., துருவ் சேர்க்கப்படுவது பற்றி டி.ஆர்.டி.ஓ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவுடன் எல்லை பிரச்னையை கொண்டிருக்கும் சீனாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை கொண்ட நாடுகள். அப்படியிருக்கும் சூழலில் ஏவுகணைகளை அடையாளம் காணும் விதமான, ஐ.என்.எஸ்., துருவ், இந்திய கடற்படை பாதுகாப்பிற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.
ஐ.என்.எஸ்., துருவ் கப்பல் வாயிலாக ஏடன் வளைகுடா முதல் மலாக்கா, லம்போ வழியாக, தெற்கு சீன கடல் பகுதியையும் கண்காணிக்க முடியும்.எதிரிநாட்டு ஏவுகணைகள் குறித்த தகவல்களை கண்காணித்து முன் கூட்டியே இந்த கப்பல் தகவல் தெரிவிக்கும்போது, அந்த ஏவுகணைகளை நம் ராணுவம் தாக்கி அழிக்க முடியும்.
இந்திய பெருங்கடலுக்குள் பாதுகாப்புக்காக பல கப்பல்களை கடற்படை நிறுத்தியுள்ளது. அந்த கப்பல்களுக்கெல்லாம் தலைவனாக ஐ.என்.எஸ்., துருவ் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
11-செப்-202109:59:06 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN தேச விரோத காங்கிரஸ்-கம்மி-முல்லா-கூலிபன் கும்பலுக்கு டன் கணக்கில் ஜெலுசில் பார்சல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X