கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழில் குடமுழுக்கு நடத்த குழு உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுரை:நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்களின் பாடல்களை தமிழ் அறிஞர்கள் குழுவை அமைத்து தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தர அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னை பொன்னுசாமி, 'கரூர் பசுபதீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கில் தமிழ் திருமுறைகள், தமிழ் சைவ

மதுரை:நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்களின் பாடல்களை தமிழ் அறிஞர்கள் குழுவை அமைத்து தொகுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் தர அரசு முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சென்னை பொன்னுசாமி, 'கரூர் பசுபதீஸ்வர சுவாமி கோயில் குடமுழுக்கில் தமிழ் திருமுறைகள், தமிழ் சைவ மந்திரங்கள் இடம்பெற உத்தரவிட வேண்டும்,' என 2020 ல் பொது நல மனு செய்தார்.2020 ல் விசாரணையின்போது தமிழக அரசுத் தரப்பில், 'குடமுழுக்கில் வேதப் பாசுரங்களுடன் தமிழ் பாசுரங்களும் ஓதப்படும்,' என உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் என்.கிருபாகரன் (தற்போது பணி ஓய்வு), பி.புகழேந்தி அமர்வு: தமிழ் பண்டைய மொழிகளில் ஒன்று மட்டுமல்ல. அது கடவுளின் மொழி. சிவன் நடனமாடும்போது முரசிலிருந்து வந்த ஒலியிலிருந்து தமிழ் பிறந்ததாக நம்பப்படுகிறது. கடவுள் முருகன் தமிழை படைத்தார் என மற்றொரு சிந்தனை மரபு உள்ளது. முதலாம் தமிழ்ச் சங்கத்திற்கு சிவன் தலைமை வகித்ததாக புராணங்கள் கூறுகின்றன.

தமிழ் கவிஞர்களின் அறிவை சோதிக்க சிவன் 'திருவிளையாடல்' நடத்தியதாக நம்பப்படுகிறது. தமிழ் கடவுளோடு இணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தெய்வீக மொழியை குடமுழுக்கில் பயன்படுத்த மனுதாரர் இந்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.சமஸ்கிருதம் பழமையான மொழி என்பதில் சந்தேகமில்லை. தமிழ் பழமையான மொழி என்பது கொடுமணல், சிவகளை, கீழடி, அழகன்குளம் அகழாய்வு மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழில் ஓதுவது எப்படி மெதுவாக மறைந்தது என தெரியவில்லை. குடமுழுக்கின்போது சமஸ்கிருதம்,வேதங்களுடன் தமிழ் பாசுரங்கள், திருமுறைகள் இடம்பெறுவது அவசியம்.தமிழ் அறிஞர்கள், பக்தர்களைக் கொண்ட குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள், அருணகிரிநாதர், பட்டினத்தார் மற்றும் சித்தர்களின் பாடல்களை அடையாளம் கண்டு தொகுக்க வேண்டும். அக்குழு நிபுணர்களுடன் ஆலோசித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.குடமுழுக்கில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அரசு முடிவெடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X