இந்தியா

ராஜ்யசபா ரகளை சம்பவம்: காங்கிரஸ் புது முடிவு

Updated : செப் 11, 2021 | Added : செப் 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி :ராஜ்யசபாவில் கடந்த மாதம் நடந்த ரகளை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை ஏற்க மறுப்பதோடு, அக்குழுவில் உறுப்பினராக இணைய முடியாது என்றும் காங்கிரஸ் கூறிவிட்டதால், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில், பெரிய மோதல் நிலவியது. பொதுகாப்பீட்டு மசோதா
 ராஜ்யசபா ரகளை சம்பவம்: காங்கிரஸ் புது முடிவு

புதுடில்லி :ராஜ்யசபாவில் கடந்த மாதம் நடந்த ரகளை குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை ஏற்க மறுப்பதோடு, அக்குழுவில் உறுப்பினராக இணைய முடியாது என்றும் காங்கிரஸ் கூறிவிட்டதால், புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆளும் தரப்புக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையில், பெரிய மோதல் நிலவியது. பொதுகாப்பீட்டு மசோதா நிறைவேற்றத்தின் போது ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அப்போது நடந்த ரகளையில் கண்ணாடி கதவுகள் உடைக்கப்பட்டது. சபையின் மையத்தில் உள்ள பெரிய நீள்வட்ட டேபிள் மீது எம்.பி.,க்கள் ஏறி கூச்சலிட்டதும், இந்த சம்பவத்துக்காக சபைத் தலைவர் வெங்கையா நாயுடு மனம் உடைந்து கண்ணீர் விட்டதும் நடந்தது.
எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தங்களை தாக்கியதாக ராஜ்யசபா அலுவலர்களும், ராஜ்யசபா அலுவலர்கள், தங்களைத் தாக்கியதாக எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் பரஸ்பரம் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து முழுவதுமாக ஆய்வு செய்ய விசாரணை கமிஷன் அமைக்கப்படுவதாக ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். இக்குழுவில் கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் இடம்பெறுவர் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.


latest tamil news



கடந்த வாரம் தன்னை சந்திக்க வந்த எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், விசாரணைக்குழுவில் உறுப்பினராக காங்கிரசைச் சேர்ந்த பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என, வெங்கையா நாயுடு கேட்டிருந்தார்.இந்நிலையில்தான் இந்த விசாரணைக்குழுவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், சிவசேனா, திரிணமுல், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

இது குறித்து வெங்கையா நாயுடுவுக்கு ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ராஜ்யசபாவில் நடந்த சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை பார்க்கும்போது, அது எம்.பி.,க்களின் குரலை ஒடுக்குவதற்காக அமைக்கப்பட்ட குழுவாக தெரிகிறது.
இந்த நடவடிக்கையானது, மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.,க்களை குரலை மட்டும் ஒடுக்கவில்லை; ஆளும் அரசுக்கு சாதகமாக இல்லாத எவராக இருந்தாலும், அவர்களையும் புறந்தள்ள வேண்டுமென்ற நோக்கிலேயே அமைந்துள்ளது.
இதுபோன்ற அமளிகள் பார்லிமென்ட் வரலாற்றில் நிறையவே நடந்துள்ளன. இதே ஆளும் கட்சி ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் நிறைய ரகளைகளை அரங்கேற்றியதை யாரும் மறந்துவிடவில்லை.
எனவே இந்த குழு அமைக்கப்பட்டதை ஏற்க முடியாது. இந்த நடவடிக்கையை முற்றிலுமாக எதிர்க்கிறேன். இதனால் காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படுவார்
என்ற கேள்விக்கே இடமில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Gurusamy - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
11-செப்-202113:17:57 IST Report Abuse
Suresh Gurusamy இதுபோன்ற அமளிகள் பார்லிமென்ட் வரலாற்றில் நிறையவே நடந்துள்ளன. இதே ஆளும் கட்சி ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் நிறைய ரகளைகளை அரங்கேற்றியதை யாரும் மறந்துவிடவில்லை. எனவே இந்த குழு அமைக்கப்பட்டதை ஏற்க முடியாது. அந்த ரகளை அவர்கள் உரிமை 7ன்று மிக தெளிவா சொல்லிட்டார்...காட்டு மிராண்டி கூட்டம்.
Rate this:
Cancel
Jaga - Tamil nadu,இந்தியா
11-செப்-202112:23:11 IST Report Abuse
Jaga மேசை மீது ஆட கூட உரிமை இல்லை என்ன ஐனநாயகமோ ஆளும்கட்சி எதிர்கட்சிகளின் குரல்வளையை நசுக்கபார்கின்றது மங்குனி மக்களெ
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
11-செப்-202111:01:43 IST Report Abuse
Suppan இந்த திருட்டு திமுக, கம்யூனிஸ்ட் த்ருணமூல் காங்கிரஸ் லாலு கட்சி, முலாயம் கட்சி, அப்துல்லா கட்சி, மெஹபூபா கட்சி போன்றவைகளுடன் கூட்டு வைத்ததன் பலன் காங்கிரசும் ரவுடிக் கட்சி என்றாகிவிட்டது. வேதனை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X