தமிழ்நாடு

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் நின்றது

Added : செப் 11, 2021
Share
Advertisement
சென்னை "திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நேற்று திருவள்ளூரில் நின்று சென்றது.சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு, மாலை 3:20 மணிக்கு இயக்கப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூரில் நிற்காது.சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், நேற்று வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால்,

சென்னை "திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நேற்று திருவள்ளூரில் நின்று சென்றது.சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு, மாலை 3:20 மணிக்கு இயக்கப்படும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூரில் நிற்காது.சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், நேற்று வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயக்கப்பட்டன.திருவள்ளூரில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவு செய்திருந்த ௨௫க்கும் மேற்பட்டோர்,இந்த ரயிலுக்கு முன்னதாக, திருவள்ளூரில் இருந்து மாலை 3:25 மணிக்கு திருத்தணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலில் அரக்கோணம் சென்று, அங்கிருந்து திருவனந்தபுரம் மற்றும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதற்காக திருவள்ளூர் நிலையத்துக்கு வந்தனர்.நிலையத்திற்கு வந்த பின் தான், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படுவதும், 3:25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இல்லை என்பதும் தெரிந்தது. பஸ் அல்லது வாகனங்களில் அரக்கோணம் சென்று திருவனந்தபுரம், லால்பாக் ரயில்களை பிடிப்பது சிரமம் என, ரயில் நிலைய மேலாளரிடம் கூறி, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் நிற்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர். சூழ்நிலையை உணர்ந்த நிலைய அதிகாரி, ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் நிலைமையை தெரிவித்தார். இதனால், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருவள்ளூர் நிலையத்தில் நேற்று, ஒரு நிமிடம் நின்று சென்றது. காத்திருந்த பயணியர் அதிகாரிகளுக்கு நன்றி கூறி ஏறிச்சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X