தடுப்பு இல்லாத சிறுபாலம் : வாகன ஓட்டிகள் அச்சம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
வயலுார் வயலுாரில் தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலத்தால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம் வயலுாரில் இருந்து, சூரகாபுரம் மற்றும் உளுந்தை செல்லும் வழியில், வயலுார் ஏரியிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் சிறு பாலம் ஒன்று உள்ளது.இந்த சிறுபாலத்திற்கு தடுப்புச் சுவர் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம்

வயலுார் வயலுாரில் தடுப்புச்சுவர் இல்லாத சிறுபாலத்தால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.கடம்பத்துார் ஒன்றியம் வயலுாரில் இருந்து, சூரகாபுரம் மற்றும் உளுந்தை செல்லும் வழியில், வயலுார் ஏரியிலிருந்து நீர் வெளியேறும் பகுதியில் சிறு பாலம் ஒன்று உள்ளது.இந்த சிறுபாலத்திற்கு தடுப்புச் சுவர் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த பாலப் பகுதியில், மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பிகளும் தாழ்வான நிலையில் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே, சிறு பாலத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்க, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின் வாரியத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வயலுார் பகுதியில் ஆய்வு செய்து, சிறு பாலத்திற்கு தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தாழ்வான நிலையில் செல்லும் மின் கம்பிகளில் மின்சார வினியோகம் இல்லை. அந்த மின் கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X