பாலும் தௌிதேனும் பாகும் பருப்பும் வைத்து வழிபாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாலும் தௌிதேனும் பாகும் பருப்பும் வைத்து வழிபாடு

Added : செப் 11, 2021
Share
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்தாலும், வீடு, கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகருக்கு பிடித்த உணவு, பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து மக்கள் வழிபட்டனர். மாமல்லபுரம் கணேச ரத கோவிலில் தொல்லியல் துறையினர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன்,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்தாலும், வீடு, கோவில்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

விநாயகருக்கு பிடித்த உணவு, பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து மக்கள் வழிபட்டனர். மாமல்லபுரம் கணேச ரத கோவிலில் தொல்லியல் துறையினர், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன், சதுர்த்தி உற்சவம் நடத்தி, மக்களுக்கு பிரசாதம் வழங்கினர். அறநிலையத் துறை நிர்வகிக்கும் மல்லிகேஸ்வரர், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர், கூவத்துார் திருவாலீஸ்வரர் உள்ளிட்ட பல கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது

* திருப்போரூர், கேளம்பாக்கம், மாம்பாக்கம், கண்டிகை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை, பூ, பழம் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவரவர் வீடுகளிலும், விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்போரூர், கேளம்பாக்கம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்

* திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆவணி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி நாளான நேற்று, பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கிழக்கு புற, 16 கால் மண்டபத்தில் ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டன. பக்தர்களின் வாகனங்களால், ஓ.எம்.ஆர்., சாலை, நான்கு மாடவீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது செங்கல்பட்டு சக்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி சுயம்பு மாமரத்து சுயம்பு சித்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன; கோவில்களில் பக்தர்கள் வழிபட்டனர்

* காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள களக்காட்டூர் வரசித்தி விநாயகர் கோவிலில் கறிவேப்பிலை சாதம், சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் படையலிட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது திருத்தணி அரக்கோணம் சாலை முக்கண் விநாயகர், சேகர்வர்மா நகர் சக்தி விநாயகர் கோவில், சித்துார் சாலை விநாயகர் கோவில் உட்பட, திருத்தணி சுற்று வட்டார கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது

* திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமான வாசீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவிலில் 11 விநாயகர் சிலைகள் உடைய ஏகாதச செல்வ விநாயக சபை அமைந்துள்ளது. இங்கு காலை 10:30 மணிக்கு 11 விநாயகர் சிலைகளுக்கு, பல அபிஷேகங்கள் நடந்தன.விநாயகர் சதுர்த்தி விழா என்றாலே, கிராமம் முழுதும் ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாட்டமாக இருக்கும். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், பொது இடங்களில் கொண்டாட, அரசு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அவரவர் வீடுகளில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினோம். எளிமையாக இருந்தாலும் மன நிறைவு.-எஸ்.பழனிவேல், 35, முத்தியால்பேட்டை.எங்கள் வீதியில் பெரிய விநாயகர் சிலை வைத்து விமரிசையாக வழிபடுவோம். வீதிகளில் வைத்த பெரிய விநாயகர் சிலைகளுடன், வீடுகளில் வைத்த சிறிய சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று கடலில் கரைப்போம். ஆனால் இந்த முறை கொரோனா காரணமாக அரசு தடை விதித்துள்ளதால், வீடுகளில் மட்டும் கொண்டாடுகிறோம்.-எஸ்.தேவி, 39, திருப்போரூர்.விநாயகர் சதுர்த்தி நாளில் முகூர்த்த திருமணம் என்பதால், கோவில், மண்டபங்களில் ஏராளமான மக்கள் கூட்டம் காணப்பட்டது. பேருந்துகளில் கூட்டம் காணப்படுகிறது. அப்படி இருக்கும்பட்சத்தில், பொது இடத்தில் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை வைத்து வழிபட அரசு அனுமதித்து இருக்கலாம்.கே.செந்துார், 30, திருப்போரூர்.கொரோனா பாதிப்பால், கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியது திருப்தியாக உள்ளது. கடவுள் கஷ்டத்தை போக்கி, நல்வழி காட்டுவார் என்ற நம்பிக்கை உண்டு.எஸ்.மஞ்சுளா, 43, குடும்பத் தலைவி, மாமல்லபுரம்.ஆண்டுதோறும் கொண்டாடும் விதத்திலேயே, எங்கள் இல்லத்தில் வழக்கமான உற்சாகத்துடன், களிமண் விநாயகர் சிலை வைத்து கொண்டாடினோம். எருக்கம் பூ, தும்பை பூ, பவளமல்லி, செவ்வரளி மலர்கள் வைத்து வழிபாடு செய்தோம்.எம்.சாந்தி, என்.ஜி.ஜி.ஓ., நகர், செங்கல்பட்டு.விநாயகருக்கு உகந்த பட்சணங்கள், 21 வகை பழங்கள், 9 வகை பூக்கள் வைத்து விநாயகரை வழிபட்டோம். மன நிறைவாக இருந்தது, இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி.எஸ்.சந்திரபாபு, 49, உத்திரமேரூர்மன நிறைவுசிலைகள் அகற்றம் திருப்போரூர் அடுத்த தண்டலம் பஸ் நிறுத்தம் அருகே, ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஒன்று வைக்கப்பட்டது. திருப்போரூர் போலீசார், சிலை வைக்கக்கூடாது என அறிவுறுத்தினர். சிறிது நிமிடம் வழிபாடு முடித்து, அவர்களே அகற்றினர். செங்கல்பட்டு அடுத்த கூணம்பட்டறை கிராமத்தில், 6 அடி உயர விநாயகர் சிலையை பொதுமக்கள் நிறுவினர். தகவலறிந்த வருவாய் துறை மற்றும் போலீசார், சிலையை பறிமுதல் செய்தனர்.  திருத்தணி அடுத்த தலையாறிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சரக்கு ஆட்டோ மூலம் 5.5 அடி விநாயகர் சிலையை நேற்று முன்தினம் இரவு கொண்டு வந்தனர். திருத்தணி போலீசார், விநாயகர் சிலையை பறிமுதல் செய்தனர். உத்திரமேரூர் அடுத்த, பாரதிபுரம் கிராம இளைஞர்கள், அங்குள்ள கோவிலில் வைத்த 3 அடி உயர விநாயகர் சிலை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

- நமது நிருபர் குழு -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X