பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், திறன் ஆள்சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாம், இன்று நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியின் செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திறன் ஆள்சேர்ப்பு மற்றும் வேலை

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், திறன் ஆள்சேர்ப்பு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாம், இன்று நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியின் செய்திக்குறிப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திறன் ஆள்சேர்ப்பு மற்றும் வேலை வாய்ப்பு முகாம், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில் இன்று நடக்கிறது.காலை, 10:00 மணிக்கு துவங்கும் இம்முகாமில், திறன் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமா, பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X