ரேஷன் கடைகளில் போதிய விற்பனையாளர்கள் இல்லாததால் மக்கள் பாதிப்பு

Added : செப் 11, 2021
Share
Advertisement
கூவத்துார்:கூவத்துார் பகுதி நியாயவிலை கடைகளில் போதிய விற்பனையாளர்கள் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், கூவத்துார், கடலுார், கானத்துார் பகுதிகளில் மொத்தம் 12 நியாயவிலை கடைகள் இயங்குகின்றன.இவற்றில், 4,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அனைத்து கடைகளுக்கும் இரு

கூவத்துார்:கூவத்துார் பகுதி நியாயவிலை கடைகளில் போதிய விற்பனையாளர்கள் இல்லாததால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ், கூவத்துார், கடலுார், கானத்துார் பகுதிகளில் மொத்தம் 12 நியாயவிலை கடைகள் இயங்குகின்றன.இவற்றில், 4,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அனைத்து கடைகளுக்கும் இரு விற்பனையாளர்களே உள்ளனர்.ஒருவரே பல கடைகளுக்கு பணிபுரிவதால், எப்பகுதியில், எந்நாளில் கடை திறக்கப்படுகிறது என அறியவோ, பொருட்கள் வாங்கவோ இயலாமல் அட்டைதாரர்கள் பரிதவிக்கின்றனர்.

கடை திறக்கப்பட்டுள்ளதாக அறிந்து கடைக்குச் சென்றாலும், விற்பனையாளர், பொருட்கள் தீர்ந்துவிட்டதாக கூறுகின்றனர்.இதனால் விற்பனையாளர், பொதுமக்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இப்பகுதி கடைகளில், தேவைக்கேற்ற ஊழியர்களை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X