பொது செய்தி

தமிழ்நாடு

உயர்நிலை பள்ளி கட்டட பணி நிறைவு

Added : செப் 11, 2021
Share
Advertisement
வாலாஜாபாத்:வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டுமான பணி நிறைவு பெற்று, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, போதிய கட்டட வசதி இல்லாததால், ஊராட்சி கட்டடங்களில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதையடுத்து, தோப்பு புறம்போக்கு நிலம் பள்ளிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1 கோடி
 உயர்நிலை பள்ளி கட்டட பணி நிறைவு

வாலாஜாபாத்:வையாவூர் அரசு உயர்நிலைப் பள்ளி கட்டுமான பணி நிறைவு பெற்று, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு, போதிய கட்டட வசதி இல்லாததால், ஊராட்சி கட்டடங்களில் மாணவர்கள் படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதையடுத்து, தோப்பு புறம்போக்கு நிலம் பள்ளிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இந்நிதியில் எட்டு வகுப்பறை கட்டடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி, 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டது. தற்போது கட்டுமான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.பள்ளிக்கு கட்டிய புதிய கட்டடம் மாணவ - மாணவியரின் பயன்பாட்டிற்கு, விரைவில் திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X