சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுராந்தகம் வட்டாரத்தில் செங்கல் விலை உயர்வு

Added : செப் 11, 2021
Share
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் செங்கல் விலை கட்டுக்குள் இருந்ததால் சிமென்ட் விலை சற்று உயர்ந்தாலும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்தன.தற்போது பல பகுதிகளில் செங்கல் விலை ஏற்றம் கண்டுள்ளதால், கட்டுமான பணி முடங்கியுள்ளது.மதுராந்தகம் பகுதி மக்கள் கூறியதாவது:செய்யாறு மற்றும்
 மதுராந்தகம் வட்டாரத்தில் செங்கல் விலை உயர்வு

மதுராந்தகம்:மதுராந்தகம் சுற்று வட்டாரத்தில் ஏராளமான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கடந்த ஆண்டுகளில் செங்கல் விலை கட்டுக்குள் இருந்ததால் சிமென்ட் விலை சற்று உயர்ந்தாலும், கட்டுமான பணிகள் தொடர்ந்து நடந்தன.தற்போது பல பகுதிகளில் செங்கல் விலை ஏற்றம் கண்டுள்ளதால், கட்டுமான பணி முடங்கியுள்ளது.

மதுராந்தகம் பகுதி மக்கள் கூறியதாவது:செய்யாறு மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பகுதி சூளைகளில் இருந்து, செங்கல் இறக்குமதி செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு ஒரு செங்கல், 5 - 6 ரூபாய் வரை விற்கப்பட்டது. தற்போது 7 - 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

மழையால் பாதிப்பு மற்றும் போக்குவரத்து செலவு காரணமாக, விலை ஏற்றப்பட்டதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர்.அதேபோல் மணல், சிமென்ட், கம்பி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வீடு கட்ட முடியாமல் சிரமப்படுகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X