பொது செய்தி

இந்தியா

சுவாமிகளை அவமதித்தோர் பலனை அனுபவிப்பர் சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் விளக்கம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
ஹாசன்:"ஹிந்து நாடு என்றால் தெய்வம், தர்மம், சத்தியம், சாதுக்கள் மீதான நம்பிக்கையாகும். சுவாமிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய போது, அவர்களை அவமதித்தவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர்," என கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் தெரிவித்தார்.ஹாசனில் அவர் கூறியதாவது:மடாதிபதிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியது, எடியூரப்பாவை முதல்வர் பதவியில், தக்க
 சுவாமிகளை அவமதித்தோர் பலனை அனுபவிப்பர் சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் விளக்கம்

ஹாசன்:"ஹிந்து நாடு என்றால் தெய்வம், தர்மம், சத்தியம், சாதுக்கள் மீதான நம்பிக்கையாகும். சுவாமிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய போது, அவர்களை அவமதித்தவர்கள், அதற்கான பலனை அனுபவிப்பர்," என கோடி மடத்தின் சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் தெரிவித்தார்.

ஹாசனில் அவர் கூறியதாவது:மடாதிபதிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியது, எடியூரப்பாவை முதல்வர் பதவியில், தக்க வைத்துக்கொள்வதற்காக அல்ல. கொரோனா, மழை, வெள்ளப்பெருக்கால் மக்கள் சாகின்றனர்; அவதிப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், முதல்வர் மாற்றம் தேவையில்லை என, ஆலோசனை கூறினர்; வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.ஆனால், ஆளுங்கட்சி மேலிடம், மடாதிபதிகளின் ஆலோசனையை நிராகரித்தது; அதற்கான பலனை அனுபவிப்பர்.

அது எப்படி என்பதை இப்போதே கூற முடியாது; நீங்களே காத்திருந்து பாருங்கள். போராட்டம் நடத்திய சுவாமிகளை, அவமதித்தவர்களும் பலனை அனுபவிப்பர்.கர்நாடக அரசியலின் பின்னணியில் சூத்தரதாரி உள்ளனர். முதல்வர் பசவராஜ் பொம்மை, பொம்மை போன்றுள்ளார்.நுால் ஆட்டி வைத்த படி, பொம்மை ஆடும். முதல்வர் பசவராஜ் பொம்மை பின்னே, சூத்திரதாரியாக எடியூரப்பா உள்ளார். அரசுக்கு எதுவும் ஆகாது; பத்திரமாக இருக்கும்.உலக வரைபடத்திலிருந்து, ஒரு நாடு காணாமல் போகும் என, ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, நான் ஆரூடம் கூறியிருந்தேன். இப்போது ஆப்கானிஸ்தான் நிலை அப்படித் தான் உள்ளது.அந்நாடு உலக வரைப்படத்திலிருந்தே அழிந்துவிட்டது.

ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்களால், மொத்த உலகமும் நடுங்குகிறது.நாட்டில் மழை மேலும் அதிகரிக்கும்; அபாயம் ஏற்படும்; பூமி நடுங்கும். கார்த்திகை மாதம் வரை, இந்த சூழ்நிலை இருக்கும். எனவே கடவுள், ஆன்மிக வழிபாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X