'உள்துறை அமைச்சரின் தோல்வியே மைசூரு கொடூரத்திற்கு காரணம்'

Added : செப் 11, 2021
Share
Advertisement
மைசூரு:''மைசூரு மலையடிவாரத்தில் சமீபத்தில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார கொடூரத்திற்கு உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் துறையின் தோல்வியே காரணம்,''என காங்., - எம்.எல்ஏ., தன்வீர் சேட் குற்றம் சாட்டினார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:உ.பி., மாணவி ஒருவருக்கு மைசூரு சாமுண்டீஸ்வரி மலை அடிவாரத்தில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார கொடூரம் தொடர்பாக, ஆய்வு செய்ய காங்கிரஸ்
 'உள்துறை அமைச்சரின் தோல்வியே மைசூரு கொடூரத்திற்கு காரணம்'

மைசூரு:''மைசூரு மலையடிவாரத்தில் சமீபத்தில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார கொடூரத்திற்கு உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் துறையின் தோல்வியே காரணம்,''என காங்., - எம்.எல்ஏ., தன்வீர் சேட் குற்றம் சாட்டினார்.

மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:உ.பி., மாணவி ஒருவருக்கு மைசூரு சாமுண்டீஸ்வரி மலை அடிவாரத்தில் நடந்த கூட்டு பாலியல் பலாத்கார கொடூரம் தொடர்பாக, ஆய்வு செய்ய காங்கிரஸ் சார்பில், சத்திய சோதனை கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, முழுமையான தகவலை சேகரித்து, அறிக்கை தயாரித்துள்ளனர். அரசுக்கு சில சிபாரிசுகளையும் செய்துள்ளனர்.

அந்த கமிட்டிக்கு தலைமையேற்றிருந்த காங்., - எம்.எல்.ஏ., தன்வீர் சேட் கூறியதாவது:இந்த அறிக்கையை, காங்., தலைவரிடம் அளித்துள்ளோம். நீதிபதி வர்மா அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டோருக்கு உதவி, சிகிச்சை, பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால் இவ்வழக்கில், இம்மூன்றும் அம்சங்களும் பின்பற்றப்படவில்லை. பாலியல் பலாத்கார வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, 15 மணி நேரம் தாமதப்படுத்தியது ஏன் என தெரியவில்லை.

பலாத்கார கொடூரத்திற்கு உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் துறையின் தோல்வியே காரணம் என்பதை, சத்திய சோதனை கமிட்டி சுட்டி காண்பித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X