பொது செய்தி

இந்தியா

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனை தயார்

Added : செப் 11, 2021
Share
Advertisement
பெங்களூரு:ஜெயநகரின் கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனை, தற்போது கொரோனா மருத்துவமனையாக மாறியுள்ளது. 99 லட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ள அந்த மருத்துவமனை, கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:பெங்களூரின் ஜெயநகரில், கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனை உள்ளது. கொரோனா 3வது அலை பீதி உள்ளதால்
 கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனை தயார்

பெங்களூரு:ஜெயநகரின் கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனை, தற்போது கொரோனா மருத்துவமனையாக மாறியுள்ளது. 99 லட்சம் ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்டுள்ள அந்த மருத்துவமனை, கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

இது தொடர்பாக, கே.எஸ்.ஆர்.டி.சி., உயர் அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:பெங்களூரின் ஜெயநகரில், கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனை உள்ளது. கொரோனா 3வது அலை பீதி உள்ளதால் முன்னெச்சரிக்கையாக இம்மருத்துவமனை, கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.நவீனப்படுத்தப்பட்ட அந்த மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 50 படுக்கைகள் வசதி இங்குள்ளது.

இந்த மருத்துவமனையை முதல்வர் பசவராஜ் பொம்மை, செப்டம்பர் 12ல் திறந்து வைப்பார். ஆக்சிஜன் சப்ளைக்கு 'ஹை -நேசல் ப்ளோ' வசதி, ஆக்சிஜன் உற்பத்தி வசதியும், இம்மருத்துவமனையில் உள்ளது. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான, அனைத்து உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன.நோயாளிகளின் உடல் நிலை மோசமானால் அவருக்கு உயர் ரக சிகிச்சை அளிக்க அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு இடம் மாற்றலாம்.

கொரோனா மூன்றாவது அலையால், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக, வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, குழந்தைகளின் சிகிச்சைக்கும், இம்மருத்துவ மனையில், சிறப்பு வசதி செய்துள்ளோம்.கொரோனா தொற்று ஏற்படும், போக்குவரத்துக்கழக ஊழியர்களின் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.பெங்களூரின் பொது மக்களும் கூட, மருத்துவமனையை பயன்படுத்தலாம்.

கே.எஸ்.ஆர்.டி.சி., மருத்துவமனையை நவீனப்படுத்த, பெங்களூரு தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யா, எம்.பி., நிதியிலிருந்து, 35 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். கர்நாடக மாநில பேரிடர் நிவாரண நிதி, கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்தும், உதவி பெறப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X