பொது செய்தி

தமிழ்நாடு

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

Added : செப் 11, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் மற்றும் சக்தி நகர் அருகே, அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.கோவில் வளாகத்தில், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், கன்னிமூல தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், வாஸ்து சாந்தி, தீபாராதனை ஆகிய பூஜைகள்,

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் மற்றும் சக்தி நகர் அருகே, அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

கோவில் வளாகத்தில், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், கன்னிமூல தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. நேற்று முன்தினம், கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்கள், வாஸ்து சாந்தி, தீபாராதனை ஆகிய பூஜைகள், தொடர்ந்து அஷ்டபந்தன மருந்து சாத்துதல், கோபுர கலசம் வைத்தல், முளைப்பாரி அழைத்து வருதல், யாகசாலை அமைத்தல், மங்கல இசை, விக்னேஸ்வர பூஜை ஆகியன நடந்தன.நேற்று காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, கலச புறப்பாடு, செல்வவிநாயகர் கோபுர கலசத்துக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தன. 48 நாட்கள் மண்டல பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, நிர்வாக கமிட்டி மற்றும் பாம்பே நகர், சக்தி நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X