பொது செய்தி

இந்தியா

மதுரா - பிருந்தாவனத்தில் இறைச்சி, மது விற்க தடை

Added : செப் 11, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
நொய்டா : உத்தர பிரதேச மாநிலம், மதுரா - பிருந்தாவனம் மாநகராட்சி பகுதியை சுற்றி, 10 கி.மீ., துாரத்துக்கு மது, இறைச்சி விற்க, மாநில அரசு தடை விதித்துள்ளது.உ.பி.,யின் மதுரா மாவட்டம், மதுரா பிருந்தாவனம் பகுதி பகவான் கிருஷ்ணரின் ஜன்மபூமியாக கருதப்படுகிறது. தனித்தனி மாநகராட்சிகளாக இருந்த மதுராவும், பிருந்தாவனமும் மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரா - பிருந்தாவன் என ஒரே மாநகராட்சியாக
Yogi Adityanath, Shri Krishna Janmabhoomi, meat sale banned, liquor sale banned

நொய்டா : உத்தர பிரதேச மாநிலம், மதுரா - பிருந்தாவனம் மாநகராட்சி பகுதியை சுற்றி, 10 கி.மீ., துாரத்துக்கு மது, இறைச்சி விற்க, மாநில அரசு தடை விதித்துள்ளது.

உ.பி.,யின் மதுரா மாவட்டம், மதுரா பிருந்தாவனம் பகுதி பகவான் கிருஷ்ணரின் ஜன்மபூமியாக கருதப்படுகிறது. தனித்தனி மாநகராட்சிகளாக இருந்த மதுராவும், பிருந்தாவனமும் மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரா - பிருந்தாவன் என ஒரே மாநகராட்சியாக 2017ல் இணைக்கப்பட்டது.


latest tamil news


கிருஷ்ண ஜெயந்தி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மதுராவுக்கு சென்று கிருஷ்ண ஜன்மபூமியில் வழிபட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், மதுராவில் மது, இறைச்சி விற்க உடனடியாக தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் உ.பி., அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிருஷ்ண ஜன்மபூமியான மதுரா - பிருந்தாவனத்தின் புனிதத்தை கருதி அப்பகுதியை சுற்றி, 10 கி.மீ., துாரத்துக்கு இறைச்சி, மது விற்க தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை முழுமையாக அமல்படுத்த மதுரா மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை சேர்ந்த மது, இறைச்சி வியாபாரிகளுக்கு வேறு தொழில் ஏற்படுத்தி கொடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-202115:40:53 IST Report Abuse
Pugazh V இந்த பாஜக அல்லவா இந்துக்கள் எதிரி. நேற்று ஓபிசி மாநாடு. இன்று அதே ஓபிசி க்களின் கடைகளை இழுத்து மூடி பாஜக அவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டது.
Rate this:
Cancel
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
11-செப்-202115:20:09 IST Report Abuse
செல்வம் அட இதென்ன அதிசயம் இங்கே அமெரிக்காவில் நாளுக்கு நாள் சைவ உணவுக்கு மாறிக்கொண்டு உள்ளார்கள்.. 1000% மேல் என்று சொன்னால் கூட மிகையாகாது
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
11-செப்-202113:05:53 IST Report Abuse
Loganathan Kuttuva சபரி மலையில் பக்தர்கள் செல்லும் பாதையில் அசைவம் விற்க மாட்டார்கள் அங்கு யாரும் அசைவம் சாப்பிடுவதில்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X