சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., அதிகாரி வீட்டில் திருட்டு

Added : செப் 11, 2021
Share
Advertisement
நெய்வேலி-என்.எல்.சி.,அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பணம், 2 டிஜிட்டல் கேமரா, லேப்டாப் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17 ல் உள்ள காமராஜர் சாலையில் வசிப்பவர் முருகன், 50; என்.எல்.சி., புதிய அனல்மின் நிலையத்தில் முதன்மை மேலாளராக பணிபுரிகிறார். இவர் குடும்பத்தினருடன் கோயம்புத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு

நெய்வேலி-என்.எல்.சி.,அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பணம், 2 டிஜிட்டல் கேமரா, லேப்டாப் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 17 ல் உள்ள காமராஜர் சாலையில் வசிப்பவர் முருகன், 50; என்.எல்.சி., புதிய அனல்மின் நிலையத்தில் முதன்மை மேலாளராக பணிபுரிகிறார். இவர் குடும்பத்தினருடன் கோயம்புத்துாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன் தினம் இரவு வெளிப்புற கேட் மற்றும் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். 2 பீரோக்களை உடைத்து பொருட்களை திருடிச் சென்றிருந்தனர். தகவலறிந்து முருகன் வந்து பார்த்த போது, ரூ. 3000, டிஜிட்டல் கேமரா, லேப்டாப் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.எஸ்.பி., நடவடிக்கை தேவைநெய்வேலி நகர எல்லையில் செயல்பட்ட போலீஸ் நிலையங்கள் தமிழக எல்லைக்குள் இடமாற்றம் செய்யப்பட்டது. நெய்வேலி நகர மக்கள் பாதுகாப்புக்காக அமைத்த 5 புறக்காவல் நிலையங்களும் திறக்காததால் குற்ற சம்பவங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளது. எனவே, எஸ்.பி.,சக்தி கணேசன் நெய்வேலி பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தொழிலாளர்கள், அதிகாரிகள், வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X