சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒரே குடும்பத்தில் மூவர் தற்கொலை  விருத்தாசலம் அருகே சோக சம்பவம்

Added : செப் 11, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் மனமுடைந்த மனைவி தனது மகள், மகனுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 40; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி, 36; இவர்களின் மகள் திவ்யா, 17; இருப்புக்குறிச்சி தனியார் பள்ளியில் பிளஸ் 2; மகன்

விருத்தாசலம்-கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் மனமுடைந்த மனைவி தனது மகள், மகனுடன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 40; கூலித் தொழிலாளி. இவரது மனைவி பாக்கியலட்சுமி, 36; இவர்களின் மகள் திவ்யா, 17; இருப்புக்குறிச்சி தனியார் பள்ளியில் பிளஸ் 2; மகன் திவாகரன், 15; கோட்டேரி அரசுப் பள்ளியில் 10ம் வகுப்பும் படித்தனர்.பாக்கியராஜ் தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பாக்கியலட்சுமி தட்டிக் கேட்டதால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும், பாக்கியராஜ் தனது பிள்ளைகளிடமும் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். வழக்கம் போல் நேற்றும் மது அருந்த போவதாக பாக்கியலட்சுமிக்கு, பாக்கியராஜ் மொபைல் மூலமாக தகவல் தெரிவித்தார்.இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி தனது மகள் திவ்யா, திவாகரன் ஆகியோரை நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு மூவரும் முந்திரி மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.ஒரே குடும்பத்தில் தாய், மகள், மகன் என 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X