சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி இரண்டரை வயது மகள் பரிதாப பலி

Added : செப் 11, 2021
Share
Advertisement
பெண்ணாடம்-பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாயுடன் சிகிச்சை பெற்ற இரண்டரை வயது மகள் பரிதாபமாக இறந்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 32; இவர் அரியலுார் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார்.இவரது மனைவி அரியலுார் மாவட்டம், தளவாய்

பெண்ணாடம்-பெண்ணாடம் அருகே குடும்ப பிரச்னையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தாயுடன் சிகிச்சை பெற்ற இரண்டரை வயது மகள் பரிதாபமாக இறந்தார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த தாழநல்லுாரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 32; இவர் அரியலுார் மாவட்டம் தளவாய் அருகே உள்ள சிமெண்ட் ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார்.இவரது மனைவி அரியலுார் மாவட்டம், தளவாய் கிராமத்தைச் சேர்ந்த மணிமொழி, 24; இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களது குழந்தைகள் இரண்டரை வயது் நேகா ஸ்ரீ, ஒன்றரை வயது தனுஷ்கா.மோகன்ராஜிக்கு குடிப்பழக்கம் உள்ளதால், கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படும். நேற்று முன்தினம் மீண்டும் பிரச்னை ஏற்பட்டதில் மனமுடைந்த, மணிமொழி, 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, பெண்ணாடம் பஸ் நிலையம் வந்தார்.அங்கு தான் வாங்கி வைத்திருந்த எலிபேஸ்ட்டை குளிர்பானத்தில் கலந்து இரு குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு, தானும் குடித்து மயங்கினார்.அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மூத்தமகள் நேகா ஸ்ரீ நேற்று பகல் 12:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X