சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரிடம் ரூ.1.20 லட்சம் மோசடி

Added : செப் 11, 2021
Share
Advertisement
விழுப்புரம்-தனியார் நிறுவனத்தின் பெயரில் வாலிபரிடம் 1.20 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.விழுப்புரம், தேவநாத சுவாமி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்தகிருஷ்ணன், 24; இவர், இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடினார்.அப்போது, தனியார் நிறுவன மொபைல் ஆப் எண்ணில் வந்த விளம்பரத்தைப் பார்த்து மொபைல் போன் மூலம்

விழுப்புரம்-தனியார் நிறுவனத்தின் பெயரில் வாலிபரிடம் 1.20 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.விழுப்புரம், தேவநாத சுவாமி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் ஆனந்தகிருஷ்ணன், 24; இவர், இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடினார்.அப்போது, தனியார் நிறுவன மொபைல் ஆப் எண்ணில் வந்த விளம்பரத்தைப் பார்த்து மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.எதிர்முனையில் பேசிய நபர் ஒரு லிங்க்கை, அனுப்பினார். அந்த லிங்க்கில் உள்ளே சென்று அக்கவுண்ட் ஓபன் செய்து, சிறு தொகைகளை முதலீடாக செய்து லாபம்ஈட்டியுள்ளார்.பின், மர்மநபர் லெவல் 1, 2 டாஸ்க் முடிவடைந்து விட்டதாகவும், லாபம் ஈட்டவேண்டும் என்றால், லெவல் 3 டாஸ்க்கை பூர்த்தி செய்ய வேண்டும் என ஆனந்தகிருஷ்ணனிடம் கூறியுள்ளார்.இதற்காக, 6 தவணைகளாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 318 ரூபாயை ஆனந்தகிருஷ்ணன், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்கிற்கு செலுத்தியுள்ளார்.இதையடுத்து, அசல் தொகை மற்றும் லாப தொகையை மர்ம நபர் கொடுக்கவில்லை.இது குறித்து ஆனந்தகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில்,விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X