பொது செய்தி

இந்தியா

21 அடி உயரத்தில் பிரம்மாண்ட விநாயகர் சிலை

Added : செப் 11, 2021
Share
Advertisement
புதுச்சேரி-விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரமாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ., துரைமுனுசாமி என்பவரால் விநாயகர் சதுர்த்திவிழா பேரவை துவக்கப்பட்டு, கடந்த 36 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.அவர்களுடன் இந்து முன்னணியினர் இணைந்து

புதுச்சேரி-விநாயகர் சதுர்த்தியையொட்டி, புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரமாண்டமான விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரியில் முன்னாள் எம்.எல்.ஏ., துரைமுனுசாமி என்பவரால் விநாயகர் சதுர்த்திவிழா பேரவை துவக்கப்பட்டு, கடந்த 36 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.அவர்களுடன் இந்து முன்னணியினர் இணைந்து செயல்படுகின்றனர்.இந்நிலையில் 37-வது விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சாரம் அவ்வை திடலில் 21 அடி உயரத்தில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் வரவேற்றார். யோகாச்சாரியா ஆனந்த பாலயோகி பவனானி ஆசியுரை வழங்கினார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர், விழா பேரவை பொது செயலாளர் சனில்குமார் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.ஆர்.எஸ்.எஸ்., கோட்ட தலைவர் செல்வ ராஜ், விழா பேரவை துணை தலைவர்கள் செல்வகணபதி, கேசவலு, துளசிமதிவாணன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வரும் 14 ம்தேதி சுவாமிக்கு சிறப்பு பூஜை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றது. அன்று மாலை 4 மணிக்கு விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X