பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்றவர் கைது

Added : செப் 11, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம்-பள்ளி மாணவர்களுக்கு கஞ்ச விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.முதலியார்பேட்டை வேல்ராம்பட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அரியாங்குப்பம்-பள்ளி மாணவர்களுக்கு கஞ்ச விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.முதலியார்பேட்டை வேல்ராம்பட்டில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். வேல்ராம்பட்டு தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.அதே பகுதியை சேர்ந்த தேவநாதன் மகன் ஸ்ரீபன்ராஜ், 27; என்பதும், அவர், பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X