போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் கடும் டிராபிக் ஜாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால் கடும் 'டிராபிக் ஜாம்'

Added : செப் 11, 2021
Share
புதுச்சேரி-போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடாததால், முகூர்த்த நாட்களில் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை;புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாலை 6 முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு சாலையிலும் வாகனங்கள் ஏறும்பு போல் ஊர்ந்து செல்கின்றன.முகூர்த்த

புதுச்சேரி-போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபடாததால், முகூர்த்த நாட்களில் கடும் டிராபிக் ஜாம் ஏற்படுவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை;புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாலை 6 முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு சாலையிலும் வாகனங்கள் ஏறும்பு போல் ஊர்ந்து செல்கின்றன.முகூர்த்த நாட்களில் மூன்று மடங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் வாகனங்கள் ஆங்காங்கே அணிவகுத்து நிற்கிறது. குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாததால், மன உளைச்சலுக்கு ஆளாகி வாகன ஓட்டிகள் இடையே தகராறு ஏற்பட்டு, கை கலப்பில் முடிகிறது. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபடாததே இதற்கு காரணம். முக்கிய சந்திப்புகளை தவிர மற்ற இடங்களில் போலீசார் பணியில் இருப்பதில்லை.முதல்வர், உள்துறை அமைச்சர் பாதுகாப்பு வாகன மின்றி முகூர்த்த நாளில் பயணம் செய்து பார்த்தால், மக்களின் துயரம் தெரியும். பாதுகாப்பு வாகனம் போக்குவரத்தை சரிசெய்து கொடுப்பதால் பொதுமக்களின் கஷ்டம் முதல்வர், உள்துறை அமைச்சர் கவனத்திற்கு வராமல் போய்விடுகிறது.போலீசார் பற்றாக்குறை இருந்தால், பிற பிரிவுகளில் உள்ள போலீசாரை போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். போக்குவரத்தை கண்காணிக்க உயர் அதிகாரி ஒருவரை நியமித்து, போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X