பொது செய்தி

இந்தியா

அமைச்சர் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்

Added : செப் 11, 2021
Share
Advertisement
திருக்கனுார்-அமைச்சர் நமச்சிவாயத் தின் பிறந்த நாள் விழா மண்ணாடிப்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளையொட்டி, மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., பிரமுகர் முத்தழகன் தலைமையில், ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.காட்டேரிகுப்பத்தில் ரவி, சிவக்குமார் ஏற்பாட்டில், சமபந்தி விருந்து

திருக்கனுார்-அமைச்சர் நமச்சிவாயத் தின் பிறந்த நாள் விழா மண்ணாடிப்பட்டு தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளையொட்டி, மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., பிரமுகர் முத்தழகன் தலைமையில், ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.காட்டேரிகுப்பத்தில் ரவி, சிவக்குமார் ஏற்பாட்டில், சமபந்தி விருந்து நடந்தது. பெண்களுக்கு புடவை வழங்கப்பட்டது. லிங்காரெட்டி பாளையத்தில் ஏழுமலை ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. கைக்கிலப்பட்டு கிராமத்தில் அருணாச்சலம் ஏற்பாட்டில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, கேக் வெட்டி கொண்டாடினர்.குமாரபாளையத்தில் ராமநாதன், கோவிந்தன் ஏற்பாட்டில் அன்னதானம், கூனிச்சம்பட்டு குமார் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு சர்க்கரை வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு கிராமங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டு அமைச்சரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.முன்னதாக கொடாத்துார் - மணவெளி கிராம மக்கள் வாண வேடிக்கை, மேள தாளத்துடன் வரவேற்பு அளித்து அமைச்சர் நமச்சிவாயத்தை ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்து வந்து கேக் வெட்டினர்.பல்வேறு பகுதியினர் அமைச்சருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X